HI






Windows இயங்குதளங்களின் புதியதும் இறுதியானதுமான Windows 10 இயங்குதளம் எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Windows 10 இலவச இயங்குதளம்

இது ஏராளமான வசதிகளை தன்னகமாக கொண்டுள்ளதுடன் ஏற்கனவே பாவனையில் இருக்கும் Windows 8/8.1 இயங்குதளம் நிறுவப்பட்டுள்ள கணினிகளிலும் இதனை பயன்படுத்த முடியும்.

இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட Windows 8 இயங்குதளம் அதன் பயனர்களுக்கு பூரணதிருப்தி அளிக்காதமையை உணர்ந்து கொண்ட Microsoft நிறுவனம் Windows 8.1 எனும் பதிப்பை அறிமுகப்படுத்தி இருந்தமையை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இருந்தாலும் Windows 8.1 பதிப்பு எந்த அளவுக்கு சாத்தியமானது என்பது கூட கேள்விக் குறியாகவே உள்ளது.

கடந்த ஆண்டு Microsoft நிறுவனம் தனது Windows இயங்குதளத்தின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தவுள்ளது என தகவல் வெளியான போது அது Windows 9 ஆக இருக்க வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அது Windows 9 இல்லை Windows 10 என Microsoft நிறுவனம் அதிரடியாக அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து புதிய வசதிகள் உட்புகுத்தப்பட்ட Windows 10 இயங்குதளத்தினை உலகில் எந்த ஒருவராலும் தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வகையில் Windows 10 technical preview எனும் சோதனை பதிப்பை அறிமுகப்படுத்தி இருந்தது.


Windows 10 technical preview எனும் இந்த பதிப்பானது வெறும் சோதனைக்காகவே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் அதனை நிரந்தரமாக பயன்படுத்த முடியாதது என்பதுடன் அதில் ஏராளமான குறைபாடுகள் இருக்கவும் செய்தது.

இவ்வாறு அறியப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு நிரந்தர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்தப்படும் பதிப்பே எதிர்வரும் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட உள்ளது.

அத்துடன் அவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் Windows 10 பதிப்பே Windows இன் இறுதிப்பதிப்பக அமையும் என Microsoft நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தமையை நாம் அறிவோம்.

எது எப்படியோ அறிமுகப்படுத்தப்பட இருக்கும் Windows 10 பதிப்பிற்கு Windows 7 மற்றும் Windows 8/8.1 ஆகிய பதிப்புக்களை ஏற்கனவே பயன்படுத்துபவர்களால் இலவசமாக மேம்படுத்திக்கொள்ள முடியும் என்பதுடன் Windows 10 இன் சோதனை பதிப்புக்களை பயன்படுத்துபவர்களாலும் கூட தமது சோதனை பதிப்புக்களை Windows 10 இன் உத்தியோக பூர்வமான பதிப்புக்கு இலவசமாக மேம்படுத்திக்கொள்ள முடியும் என அண்மையில் Microsoft நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனை Microsoft நிறுவனம் அதன் உத்தியோக பூர்வ பக்கத்தில் பின்வருமாறு அறிவித்திருந்தது.

Windows Insiders running the Windows 10 Insider Preview (Home and Pro editions) with their registered MSA (Microsoft Account) connected to their PC will receive the final release build of Windows 10 starting on July 29th. This will come as just another flight. I've gotten a lot of questions from Windows Insiders about how this will work if they clean installed from ISO. As long as you are running an Insider Preview build and connected with the MSA you used to register, you will receive the Windows 10 final release build and remain activated. Once you have successfully installed this build and activated, you will also be able to clean install on that PC from final media if you want to start over fresh.


முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் ஏராளமான பல சலுகைகளை வழங்கும் Microsoft நிறுவனம் தனது புதிய Windows பதிப்பின் மூலம் எவ்வாறான சாகாசங்களை செய்ய போகின்றது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எனவே அறிமுகப்படுத்தப்பட இருக்கும் விண்டோஸ் 10 இன் முழுமையான பதிப்பை நீங்களும் இலவசமாக பெற விரும்பினால் அதன் சோதனை பதிப்பை உங்கள் கணினியில் நிறுவிய பின் Microsoft கணக்கொன்றினை உருவாக்கி குறிப்பிட்ட இணையதளம் மூலமாக உள்நுழைந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான். இனி Windows 10 இயங்குதளத்தின் முழுமையான பதிப்பு அறிமுகப்படுத்தப்படும் போது உங்களுக்கும் அதன் மேம்படுத்தல் இலவசமாகக் கிடைக்கும்

கீழுள்ள இணைப்பின் மூலம் Windows 10 Insider Preview பதிப்பினை தரவிறக்கிக்கொள்ளலாம்.


Windows 10 இயங்குதளத்தினை உங்கள் கணனியில் நிறுவுவதற்கு உங்கள் கணனி குறைந்தது பின்வரும் அடிப்படை அம்சங்களை கொண்டிருத்தல் வேண்டும்.

  • Processor: 1 GHz or faster with support for PAE, NX, and SSE2
  • RAM: 1 GB (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver.

புதுப்பிக்கப்பட்டது: அண்மையில் வெளியாகியுள்ள தகவல்களின் படி Windows 10 இயங்குதளத்தை Windows 7 மற்றும் Windows 8/8.1 ஆகிய பதிப்புக்களை ஏற்கனவே பயன்படுத்துபவர்களால் மாத்திரமே பயன்படுத்திக்கொள்ள முடியும்.


Love to hear what you think!

1 comments:

 
Top