இன்றைய கணினி உலகில் நாம் கணினி மூலம் ஏராளமான செயற்பாடுகளை செய்து முடிக்கின்றோம். அந்த வகையில் கணினி மூலம் ஒரு செயற்பாட்டை வெற்றிகரமாக மேற்கொள்ள கணினியுடன் இணைந்தாட் போல் காணப்படும் இணையம், மற்றும் மென்பொருள்கள் போன்றன அத்தியாவசியமான ஒன்றாக அமைகின்றது.

skype tamilinfotech


எனவே இன்று வெவ்வேறு தேவைகளுக்கும் என வெவ்வேறு மென்பொருள்களை இணையத்தின் மூலம் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் பெறமுடிகின்றது.

எனவே இந்த மென்பொருள்களின் பாவனையை மேலும் இலகு படுத்தும் வகையில் இன்றைய தொழில்நுட்பமானது அனைத்து மென்பொருள்களையும் இணைய மேடைக்கு நகர்த்தத் துவங்கியுள்ளது.


இதற்கு சான்று பகரும் வகையில் அன்மையில் Microsoft தனது One Note மற்றும் Microsoft Office போன்ற மென்பொருள்கள் மூலம் செய்துகொள்ளக் கூடிய செயற்பாடுகளை இணையத்தின் மூலம் செய்துகொள்ள வழிவகுத்திருந்தது.

மேலும் Whatsapp, Viber மற்றும் Telegram போன்ற சேவைகளையும் கூட தற்பொழுது இணையத்தின் ஊடாக அனுபவிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதுமட்டுமல்லாமல் எமது புகைப்படங்களை இணையத்தின் ஊடாக மெருகேற்றிக்கொள்ளவும், PDF கோப்புக்களை இணையத்துன் ஊடாக நிருவகிக்கவும் கோப்புக்களை ஒரு வடிவத்திலிருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளவும் என பல்வேறு செயற்பாடுகளுக்கு என பல்வேறு இணையத்தின் ஊடான சேவைகளை நாம் ஏற்கனவே எமது முன்னைய பதிவுகள் மூலம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம்.


மேலும் இவற்றினையும் பார்க்க: 
அதேபோல் தற்பொழுது Microsoft ஆள் நிருவகிக்கப்படக்கூடிய Skype சேயையும் கூட இணைய மேடைக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

skype web tamil


இந்த Skype சேவையானது அனைவராலும் அறியப்பட்ட ஒரு சேவையாகும். இணையத்தின் ஊடாக ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கும் எண்ணங்கள் கருத்துக்களை பரிமாறுவதற்கும் என வழங்கப்படும் சேவைகளுள் மிகச்சிறந்த ஒரு சேவையாகும்.

ஆரம்பத்தில் இந்த சேவையை பெற Skype மென்பொருள்களை எமது கணினியிலோ அல்லது Smart சாதனங்களிலோ நிறுவிய பின்னரே பெற்றுக்கொள்ளக் கூடியதாக அமைந்திருந்தது.

ஆனால் தற்பொழுதோ அந்த நிலைமை தகர்த்தெறியப்பட்டு எந்த ஒரு நேரத்திலும் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் மிக வேகமாக குறிப்பிட்ட சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் Skype சேவை இணைய மேடைக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

We are rolling out Skype for Web to a small group of existing and new users in selected countries and will gradually expand availability in the coming months


https://web.skype.com  எனும் முகவரியில் இருந்து இந்த சேவையை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் எனினும் அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு சில நாட்களே ஆகையால் இந்த வசதியை தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிகின்றது. மேலே ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள தகவல் Skype நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.


இந்த வசதி ஆரம்ப கட்டமாக ஐக்கிய அமேரிக்கா மற்றும் ஐக்கிய இராஜியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சிறியதொரு உபாயத்தினை பயன்படுத்தி இந்த வசதியினை எந்த ஒரு நாட்டிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

நீங்களும் இந்த வசதியினை உங்கள் நாட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.

1. பின்வரும் இணைப்பில் இருக்கும் Hola எனும் நீட்சியை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக்கொள்க.

இனி நிறுவப்பட்ட நீட்சியை உங்கள் இணைய உலாவியின் வலது மேல் மூலையில் அவதானிக்கலாம்.

2. பின் அதனை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில், Skype சேவையை இணையத்தின் ஊடாக பெருவதற்கான https://web.skype.com எனும் முகவரியை உள்ளிடுக.3. இனி குறிப்பிட்ட நீட்சியில் தரப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் UK என்பதனை தெரிவு செய்க. இதன் மூலம் உங்கள் நாட்டிற்கான IP முகவரி மறைக்கப்பட்டு UK இற்கான IP முகவரியில் குறிப்பிட்ட தளம் திறக்கப்படும்.

4. பிறகென்ன உங்கள் Skype ID மற்றும் Password போன்றவைகளை உள்ளிட்டு Skype சேவையினை அனுபவிக்கலாம்.

இது போன்ற மேலும் பல தொழில்நுட்ப தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள Facebook, Google Plus போன்ற சமூக வலைதளங்களின் ஊடாக தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top