ஆரம்பத்தில் போலல்லாது இன்று எந்த ஒன்றினையும் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் ஒரு சில நொடிப்பொழுதுகளில் பரிமாறிக்கொள்ள முடிகின்றது.முன்னொரு சந்தர்பத்தில் பயன்படுத்தப்பட்ட Infrared தொழிநுட்பம் Bluetooth இன் வருகைக்குப்பின் வழக்கொழிந்து விட்டதை போல தற்பொழுது அனைத்து Smart சாதனங்களிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ள Wi-Fi தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தில் Bluetooth தொழில்நுட்பம் வழக்கொழிந்து விடுமோ என எண்ணவும் தோன்றுகிறது.இன்று பயன்பாட்டிலுள்ள Smart சாதனங்களுக்கு இடையில் புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ மற்றும் Audio கோப்புக்கள் என அனைத்து வகையான தரவுகளையும் பரிமாறிக்கொள்ளும் வகையில் இன்றைய செயலிகள் அனைத்தும் Wi-Fi தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது.

அவ்வாறு கோப்புக்களை சாதனங்களுக்கு இடையில் பரிமாரிக் கொள்வதற்காக Wi-Fi தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலியே SHAREit எனும் Smart சாதனங்களுக்கான செயலியும் ஆகும். 

இது Android, iOS, Windows Phone போன்ற Smart சாதனங்களுக்கு இடையில் தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கான செயலிகளை கொண்டிருப்பது மாத்திரம் அல்லாது கணினிக்கும் என தனியான மென்பொருளை கொண்டிருக்கின்றமை இதன் விசேட அம்சமாகும்.


SHAREit செயலி மூலம் எவ்வாறான வசதிகளை பெறலாம்?

  • இதன் மூலம் இரு வேறு Smart சாதனங்களுக்கு இடையே தரவுகளை பரிமாறிக்கொள்ள முடிவதுடன் Smart சாதனத்துக்கும் கணினிக்கும் இடையிலும் தரவுகளை மிக வேகமாக பரிமாறிக்கொள்ள முடியும்.
  • இதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள செயலிகளையும் இன்னுமொரு Android சாதனத்துக்கு பரிமாற்ற முடிவதுடன் அதனை அந்த சாதனத்தில் நிறுவி பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். இதனால் உங்கள் நண்பரிடம் இருக்கும் ஒரு செயலியை உங்கள் சாதனத்தில் நிறுவ இரண்டு சாதனங்களிலும் SHAREit செயலி நிறுவப்பட்டிருந்தால் மாத்திரம் போதுமானது. மாறாக Google Play Store இல் இருந்து தரவிறக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • மேலும் இதில் தரப்பட்டுள்ள CLONEit எனும் வசதி மூலம் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய Smart சாதனத்தில் உள்ள புகைப்படங்கள், ஆவணங்கள், Audio மற்றும் வீடியோ கோப்புக்கள், SMS, Contact என அனைத்து தரவுகளையும் உங்கள் புதிய Smart சாதனத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
  • செக்கனுக்கு 20MB வரையான வேகத்தில் தரவுகளை பரிமாறும் இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை எவ்வாறு பயன்படுத்துவது?

இந்த செயலி நிறுவப்பட்ட இருவேறு Smart சாதனங்களுக்கு இடையில் தரவுகளை பரிமாறும் போது நீங்கள் எந்த சாதனத்தில் இருந்து கோப்புக்களை பகிர விரும்புகின்றீர்களோ அதில்  SHAREit செயலியை திறந்து Send என்பதனை அழுத்துவதன் மூலம் பகிர வேண்டிய கோப்புக்களை தெரிவு செய்ய வேண்டும் பின் கோப்புக்கள் பெறப்படும் சாதனத்தில் உள்ள SHAREit செயலியை திறந்து Receive என்பதனை அழுத்துவதன் ஊடாக தகவல் பகிரப்படும் Smart சாதனத்தை இணைக்க வேண்டும். அவ்வளவுதான். இனி தெரிவு செய்யப்பட்ட அனைத்து கோப்புக்களும் மிக வேகமாக மற்றைய Smart சாதனத்துக்கு வந்தடையும்.  • மேலும் SHAREit மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் உங்கள் கணினியையும் Smart சாதனத்தையும் இணைப்பதன் ஊடாக உங்கள் கணினியில் இருக்கக்கூடிய கோப்புக்களை Smart சாதனம் ஊடாகவும் Smart சாதனத்தில் இருக்கக்கூடிய கோப்புக்களை கணினியின் ஊடாகவும் இயக்கலாம்.

  • அத்துடன் இந்த மென்பொருளின் மூலம் உங்கள் Smart சாதனத்தில் இருக்கும் புகைப்படங்களை உங்கள் கணினிக்கு Backup எடுத்துக் கொள்ளவும் முடியும் இதனால் உங்கள் Smart சாதனத்தில் உள்ள நினைவகத்தின் ஒரு பகுதியை மீதப்படுத்திக் கொள்ளலாம். 


இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த பயனுள்ள செயலியை பின்வரும் இணைப்பு மூலம் பொருத்தமான சாதனத்துக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.

புதுப்பிக்கப்பட்டது: SHAREit v3.0 (31/8/2015)


SHAREit v3.0 android apk


தற்பொழுது இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிப்பானது முன்னைய பதிப்பில் இருந்த குறைபாடுகளை சரி செய்திருப்பதுடன் மேலும் பல அருமையான வசதிகளை உள்ளடக்கி உள்ளது.


SHAREit v3.0 android


புதிய இடைமுகத்துடன் கூடிய v3.0 எனும் இந்த பதிப்பில் SHAREit செயலியை இன்னும் ஒரு ஸ்மார்ட் சாதனத்துக்கு Bluetooth வழியாகவோ wifi Hotspot வழியாகவோ பகிர்ந்து கொள்வதற்கான வசதி தரப்பட்டுள்ளது. 


SHAREit v3.0 tamil apk


மேலும் நீங்கள் SHAREit செயலியின் மூலம் பகிர்ந்து கொண்ட அனைத்து தரவுகள் தொடர்பான தகவல்களையும் இது சேமித்து வைக்கின்றது (History)

SHAREit apkSHAREit android


மேலும் உங்கள் Android ஸ்மார்ட் சாதனத்தில் உள்ள எந்த ஒன்றினையும் தேடிப் பெறுவதற்கான வழிமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதன் புதிய பதிப்பு இதுவரை Play Store இல் புதுப்பிக்கப்படவில்லை எனவே கீழிருக்கும் முதலாவது இணைப்பு மூலம் புதிய பதிப்பின் APK கோப்பினை தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் நிறுவிக் கொள்ளலாம்.


NEW! SHAREit  V3.0 Latest Version APK For Android

மேலும் இதனையும் பார்க்க: உங்கள் கணனி, மற்றும் Android சாதனங்களின் மிக வேகமான செயற்பாட்டுக்கு உதவும் இலவச மென்பொருள்

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top