அழிக்க முடியாத கோப்புக்களை அழிப்பதும் அழித்த கோப்புக்களை திரும்ப பெறுவதும் கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி ஏற்படும் தேவைகளில் ஒன்றாகும். 

Wise Force Deleter கணினி மென்பொருள்

அந்த வகையில் கணினியில் இருந்து அழித்த கோப்புக்களை எவ்வாறு திரும்ப பெறலாம் என எமது முன்னைய பதிவு மூலம் பார்த்தோம் இந்த பதிவு மூலம் அழிக்க முடியாத கோப்புக்களை எவ்வாறு அழிக்கலாம் பார்ப்போம்.

சில சந்தர்பங்களில் எமது கணினியில் இருக்கக்கூடிய புகைப்படங்கள், ஆவணங்கள், Audio மற்றும் வீடியோ கோப்புக்கள் போன்றவற்றினையோ அல்லது இது போன்ற வேறு கோப்புக்களையோ கணினியில் இருந்து நீக்க முடியாதவாறு கணினியில் பிழைச்செய்தி தோன்றுமல்லவா?

அவ்வாறு தோன்றும் பிழைச் செய்தியானது பெரும்பாலும் பின்வருமாறு அமைந்திருக்கும்.


  • Cannot delete file: Access is denied.
  • There has been a sharing violation.
  • The source or destination file may be in use.
  • The file is in use by another program or user.
  • Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.

இது போன்ற பிழை செய்தி தோன்றுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளது.

உதாரணத்திற்கு வீடியோ கோப்பு ஒன்று எமது கணினியில் இயங்கிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட கோப்பினை நீக்க முடியாமல் போவதுண்டு அல்லது குறிப்பட்ட ஒரு கோப்பு வைரஸ் நிரல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அவற்றினை நீக்க முடியாமல் போவதுண்டு இது போன்ற ஏராளமான சந்தர்பங்களில் கோப்பு ஒன்றினை எம்மால் நீக்க முடியாமல் மேற்குறிப்பிட்ட பிழைச்செய்தி தோன்றும்.

இது போன்ற சந்தர்பங்களில் அவ்வாறான கோப்புக்களை முற்றிலுமாக நீக்கிக்கொள்ள உதவுகின்றது Wise Force Deleter எனும் இலவச கணினி மென்பொருள்.


 1.25 MB அளவு கொண்டுள்ள இதனை இணையத்தில் இருந்து இலவசமாகவே தரவிறக்கி நிறுவிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பின் மேற்குறிப்பிட்ட வகையில் நீக்க முடியாதவாறு பிழைச் செய்தியை காண்பிக்கும் கோப்புக்களை Right Click செய்து Force Delete என்பதனை அழுத்துவதன் மூலம் அவற்றினை மிக இலகுவாக நீக்கிக்கொள்ள முடியும்.

அல்லது குறிப்பிட்ட மென்பொருளை திறந்து Add File என்பதன் ஊடாகவோ அல்லது Drag & Drop செய்வதன் மூலமோ மேற்குறிப்பிட்ட வகையில் அமைந்த கோப்புக்களை நீக்கிக்கொள்ளலாம்.

நீங்களும் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.மேலும் இதனையும் பார்க்க: உங்கள் கணினி எந்தெந்த நேரத்தில் Turned on/Turned off செய்யப்பட்டது  என்பதை அறிய உதவும் இலவச மென்பொருள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top