HI






புதியனவைகள் புனைவதில் கூகுளுக்கு ஈடு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கூகுள் தனது தயாரிப்புக்களை தொடர்ச்சியாக விரிவு படுத்திக்கொண்டே செல்கின்றது.


தமிழ் Google Handwriting Input


பௌதீக வடிவில் அமைந்த தயாரிப்புக்கள் மாத்திரம் அல்லாது இணையத்தின் ஊடாக வழங்கப்படும் சேவைகளிலும் கூட அடிக்கடி புது வடிவங்களையும் புதுமைகளையும் புகுத்தி அதன் பயனர்களை குதூகலிக்கச் செய்வதில் கூகுள் "நம்பர் வன்" என்றே கூறவேண்டும்.



கணினியில் தமிழ் மொழி உட்பட இன்னும் ஏராளமான மொழிகளை தட்டச்சு செய்வதற்கான சாத்தியத்தை Google Input tools ஊடாக உருவாக்கியது மட்டுமல்லாமல் Google Translate ஊடாக ஒரு மொழியை இன்னுமொரு மொழிக்கு மாற்றும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு வசதியை  தந்த பெருமையும் கூகுளையே சாரும்.


கூகுளின் இது போன்ற சேவைகளுடன் Google Handwriting Input எனும் Android சாதனத்துக்கான செயலியையும் கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.


தொடர்புடைய இடுகை:



இந்த செயலி ஊடாக தமிழ் உட்பட மேலும் 70 இற்கும் மேற்பட்ட மொழிகளை Android சாதனத்தின் திரையில் எழுதுவதன் மூலம் அவற்றினை ஒரு சில நொடிப் பொழுதுகளிலேயே எழுத்து வடிவிற்கு மாற்றிக்கொள்ள முடியும்.

Keyboard செயலிகள் மூலம் தட்டச்சு செய்வதையும் விட மிக வேகமாக இந்த செயலி மூலமாக வசனங்களை எழுத முடிகின்றது.



நாம் சாதாரண தெளிவில் எழுதக்கூடிய எழுத்துக்களையும் கூட மிகவும் துல்லியமாக கண்டறிந்து அவற்றினை கண்ணிமைக்கும் பொழுதுகளில் எழுத்து வடிவிற்கு மாற்றித்தரும் Google இன் இந்த செயலியானது பாராட்டப்பட வேண்டிய ஒரு செயலியாகும்.

இதனை பின்வரும் இணைப்பில் இருந்து உங்கள் Android சாதனத்துக்கு நிறுவிக்கொள்க.





  • பின் குறிப்பிட்ட செயலியை திறந்து Enable Google Handwriting Input என்பதை சுட்டுக. இதன் போது தோன்றும் சாளரத்தில் Google Handwriting Input என்பதற்கு Tick அடையாளத்தினை இடுக.
  • பின்னர் Download Language என்பதனை சுட்டி தமிழ் மொழியை தெரிவு செய்து அதற்கான தரவுகளை தரவிறக்குக.

Google Handwriting Input settings tamil


  • இனி Select Google Handwriting Input என்பதனை சுட்டும் போது தோன்றும் Choose input method எனும் சாளரத்தின் ஊடாக Tamil Google Handwriting Input என்பதை தெரிவு செய்க.

அவ்வளவு தான்.


தொடர்புடைய இடுகை:  Android சாதனத்தில் மிக இலகுவாக தமிழில் தட்டச்சு செய்ய உதவும் மென்பொருள்.


மேலும் பல பயனுள்ள தகவல்களை உங்கள் கண் முன் பெற்றுக் கொள்வதற்கு  எமது பேஸ்புக் பக்கத்தின் ஊடாக இணைந்திருங்கள்.

Love to hear what you think!

2 comments:

 
Top