எதிர்காலத்தில் கொப்பியும் பேனையும் வழக்கொழிந்த பொருளாகி விடுமோ என எண்ணத் தோன்றும் அளவுக்கு இன்று இணையத்தின் ஊடான கல்வி நடவடிக்கைகள் உருவெடுத்துள்ளன.


அந்தவகையில் இன்று எந்த ஒன்றினையும் வீட்டில் இருந்தே அறிந்து கொள்ளும் வகையில் ஏராளமான இணையத்தின் ஊடாக ஏராளமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் இலங்கை கல்வித் திட்டத்துக்கு அமைவான இலவச பாடப்புத்தகங்களை இணையத்தின் ஊடாக தரவிரக்கிக் கொள்வதற்கான வசதியை வழங்குகின்றது Edupub எனும் இலங்கை அரசாங்கத்திற்கான இணையதளம்.


இந்த தளத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளுக்குமான பாடப் புத்தகங்கள் வெவ்வேறாக தரப்பட்டுள்ளதுடன் தரம் 1 தொடக்கம் தரம் 11 வரைக்குமான அனைத்து பாடப்புத்தகங்களும் இதில் தரப்பட்டுள்ளது.

இந்த தளத்தில் இருந்து தரவிறக்கப்படும் பாடப் புத்தகங்களானது PDF வடிவில் அமைந்துள்ளது. எனவே Google Chrome இணைய உலாவியை பயன்படுத்தி இவற்றினை நீங்கள் தரவிறக்க முற்படுகையில் அது உங்கள் இணைய உலாவியின் புதிய தாவலில் திறப்பதனை அவதானிப்பீர்கள். பின் அவற்றினை தரவிறக்கிக் கொள்ள குறிப்பிட்ட பக்கத்தின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள Download Button ஐ சுட்டுவதன் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.


ஆனால் Firefox மற்றும் ஏனைய இணைய உலாவிகளில் மேற்கூறிய படிமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை நேரடியாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

பாடப்புத்தகங்களை தரவிறக்கிய பின் அவற்றினை உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள எந்த ஒரு PDF Reader மென்பொருளின் ஊடாகவும் வாசிக்க முடியும். உங்கள் கணினியில் PDF Reader மென்பொருள் இல்லை எனின் கீழுள்ள பதிவில் இருந்து Foxit PDF Reader எனும் மென்பொருளை இலவசமாக உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ள முடியும்.

PDF ஆவணங்களை பார்பதற்கும், உருவாக்கிக் கொள்வதற்கும் மிகச்சிறந்த ஒரு இலவச மென்பொருள் (Windows, Android, iOS, Symbian)


  • மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளத்தில் இருந்து பாடப்புத்தகங்களை தரவிறக்குவது மிகவும் எளிது.
  • முதலில் இந்த தளத்திற்கு விஜயம் செய்து தமிழ், சிங்களம்,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உங்கள் மொழியினை தெரிவு செய்ய வேண்டும்.
  • தரவிறக்கிக் கொள்ளலாம்.பின் உங்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை தெரிவு செய்து சுட்டுவதன் மூலம் அவற்றினை மிக இலகுவாக தரவிறக்கிக் கொள்ளலாம்.


குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல : Text Books Download

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top