HI






இன்றைய உலகில் கணினியின் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்களை விடவும் Mobile சாதனங்கள் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்களே அதிகம்.

Opera Max செயலி

இதற்கு முக்கிய புள்ளியாக இன்றைய அதி நவீன Smart Phone களின் வருகையை குறிப்பிட முடிவதுடன் குறிப்பிட்ட சாதனத்தை கையடக்கமாக வைத்துக்கொள்ளவும் நினைத்த நேரத்தில் மிக இலகுவாக இணையத்தினை பயன்படுத்திக் கொள்ளவும் முடிகின்றமை இதற்கு முக்கிய காரணங்களாகும்.

அந்தவகையில் நீங்களும் Smart சாதனத்தின் மூலம் இணையத்தினை உலா வருபவரா?

அப்படியாயின் உங்கள் தரவுப்பாவனையை 50 சதவீதம் வரை சேமிக்க உதவுகின்றது Opera Max எனும் Android சாதனத்துக்கான செயலி.



உங்கள் Android சாதனத்தில் இருக்கக்கூடிய செயலிகள் இணையத்துடன் தொடர்புறும் போதோ அல்லது நீங்களாகவே குறிப்பிட்ட சாதனத்தின் மூலம் இணையத்தை உலாவரும் போதோ இடம்பெறக்கூடிய தரவுப்பாவனையை சுருக்குவதன் மூலம் உங்களின் தரவுப்பாவனையை 50 சதவீதம் வரை சேமித்துத் தருகின்றது இந்த Opera Max எனும் செயலி.

Opera Max Android செயலி

இதன் விளைவாக நீங்கள் இணையத்துக்காக செலவிடும் பணத்தில் ஒரு பகுதியை சேமித்துக்கொள்ள முடியும்.


Android தரவுப்பாவனை நிர்வகிக்கும் செயலி இது மொபைல் வழி மூலமாக இடம் பெரும் தரவுகளை (Mobile Data) மாத்திரம் அல்லாது Wi-Fi வலையமைப்பு வழியாக இடம்பெறக்கூடிய தரவுப்பாவனையையும் 80 சதவீதம் வரையில் சுருக்கித் தருகின்றது.



மேலும் நீங்கள் இணையத்தை உலா வருகையில் கண்டுகளிக்கும் வீடியோ கோப்புக்களின் அளவினையும் அதன் தரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுருக்கித் தருவதுடன் இணையத்தை பயன்படுத்தும் போது தரவிறக்கப்படும் புகைப்படங்கள் ஏனைய செயலிகளால் பயன்படுத்தப்படும் தரவுகள் போன்றவற்றினது தரவுப்பாவனையையும் Opera Max சிக்கனப்படுத்துகின்றது.


Opera Max செயலி நிறுவப்படாத சந்தர்பத்தில் நீங்கள் பார்க்கக்கூடிய 10 Mb அளவுடைய வீடியோ கோப்பினை Opera Max நிறுவப்பட்டதன் பின் வெறும் 3 Mb தரவுப்பாவனையில் பார்க்க முடியும் இதன் காரணமாக உங்களால் பெருமளவிலான தரவினை மீதப்படுத்த Opera Max செயலி வழிவகுக்கின்றது.

நீங்கள் அவ்வப்போது எந்த அளவு தரவினை பயன்படுத்தி உள்ளீர்கள் எந்த அளவு தரவினை சேமித்துள்ளீர்கள் என்பதனை இந்த செயலி புள்ளி விபர அடிப்படையில் தொகுத்துத் தருவதுடன் அவைகள் தொடர்பான நாளாந்த புள்ளிவிபரத்தையும் மாதாந்த புள்ளிவிபரத்தையும் அறிந்துகொள்ள முடியும்.


இவைகள் தவிர உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள ஒவ்வொரு செயலியாலும் எந்த அளவு தரவுகள் பயன்படுத்தப்படுகின்றது என்பதனை அறிய முடிவதுடன் தேவையற்ற வகையில் இணையத்துடன் தொடர்புபடும் செயலிகளை கண்டறிந்து அவைகள் இணையத்துடன் தொடர்பு படுவதை தடை செய்யவும் முடியம்.


இத்தனை வசதிதிகளை தரும் இந்த செயலியானது ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்காவில் மாத்திரமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது இருப்பினும் இது தற்பொழுது உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதால் உலகில் எந்த ஒருவராலும் இதனை இலவசமாகவே பயன்படுத்தி பயன் பெற முடியும்.

இதனை நீங்களும் உங்கள் Android சாதனத்துக்கு தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.



மேலும் இதனையும் பார்க்க: உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அருமையான மென்பொருள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top