விரல்களுக்குள் சுருங்கிவிட்ட இன்றைய உலகின் முக்கிய ஒரு சாதனமாக Smart சாதனங்கள் மாறியுள்ளது.

find a android phone


எனவே பல்வேறு நிறுவனங்களும் புதுப்புது வசதிகளுடனும் புதுப்புது பெயர்களுடனும் Smart சாதனங்களை தயாரித்து சந்தைக்கு விட துவங்கியுள்ளன.

இவ்வாறு அன்றாடம் பலநூறு புதுப்புது வடிவங்களில் சந்தைக்கு வந்து குவியும் Smart சாதனங்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற Smart சாதனங்களே அதிகம் வரவேற்பை பெறுகின்றன.இன்று சந்தையில் iOS இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட Smart சாதனங்களும் Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட Smart சாதனங்களுமே அதிகம் காணப்படுகின்றன.

இதில் iOS இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட Smart சாதனங்களை Apple நிறுவனம் மாத்திரமே வடிவமைத்து அறிமுகப்படுத்துவதால் அவைகளுள் வரையறுக்கப்பட்ட வடிவங்களே சந்தையில் காணப்படுகின்றன.
மாறாக Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட Smart சாதனைகளை Samsung, LG, HTC, Sony, Motorola, Huawei போன்ற ஏராளமான நிறுவனங்கள் அறிமுகப்படுத்துவதால் சந்தையில் காணப்படும் Android சாதனங்களின் எண்ணிக்கையோ ஏராளம்.


வாடிக்கையாளர்கள் தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற ஒரு Smart சாதனத்தை தெரிவு செய்ய உதவும் Google இன் தளம்.

எனவே வாடிக்கையாளர்கள் தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற ஒரு Android Smart சாதனத்தை தெரிவுசெய்து கொள்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்குகின்றனர். இந்த சிக்கலுக்கு தீர்வை தரும் வகையில் Google நிறுவனமானது பிரத்தியோகமான ஒரு பக்கத்தினை வடிவமைத்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு Android சாதனத்தில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் பல்வேறு வசதிகளும் அவற்றின் தரம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதும் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளது.

இந்த தளம் மூலம் எமது தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற ஒரு Smart சாதனத்தை தெரிவு செய்வது எவ்வாறு?

உதாரணத்திற்கு: நீங்கள் அதிக நேரம் இணையத்தை பயன்படுத்துவதற்காக ஒரு Smart சாதனத்தை கொள்வனவு செய்ய இருந்தால் இந்த தளத்தில் Web Browsing என்பதனை அழுத்தி நீங்கள் ஒரு நாளைக்கு அல்லது ஒருவாரத்துக்கு எவ்வளவு நேரம் இணையத்தை உலா வருவீர்கள் என்பதனை இந்த தளத்தின் மூலம் தெரிவு செய்யலாம். 

android சாதனம் தெரிவு செய்ய


குறைந்த பட்சம் இது போன்ற மூன்று தெரிவுகளை மேற்கொண்ட பின்னர் SHOW ME PHONES என்ற ஒரு Button தோன்றும் பின் அதனை சுட்டிய பின் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பிரதான தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றின் வலையமைப்பினை தெரிவு செய்வதற்கான பக்கம் தோன்றும் அதில் Chose Later என்பதனை அழுத்தி உங்களுக்கு ஏற்ற Smart சாதனங்களை பார்க்கலாம்.


இந்த தளத்தில் மேலதிக வசதிகள் உண்டா?

இந்த தளத்தின் மூலம் நீங்கள் தெரிவு செய்த Smart சாதனங்களை இன்னுமொருவருக்கு மின்னஞ்சல் செய்யும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த தளத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Smart சாதனங்கள் மாத்திரமே பட்டியல் படுத்தப்படுகின்றது.

குறிப்பிட்ட தளத்துக்கு செல்ல: Which Android Phone

எமது கருத்து: தமது தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவகையில் சந்தைக்கு புதிதாக வந்த ஒரு Smart Phone ஐ கொள்வனவு செய்ய இருக்கும் ஒருவருக்கு இந்த தளம் மிகவும் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top