ஆரம்பத்தில் மின்னஞ்சல் என்றாலே என்னவோ ஏதோ என நினைக்கும் நாம் இன்று சர்வ சாதாரணமாக ஒன்றல்ல எத்தனையோ மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி பயன்படுத்துகிறோம் அல்லவா?
write gmail

இன்று மலிவாகி விட்ட இணையப்பாவனையும் தொழில்நுட்ப சாதனங்களும் காரணமாக நாம் அனைவரும் பேசக்கூடிய மொழி Internet, E-mail, Whatsapp, Viber என்றாகிவிட்டது. எனவே இன்றைய உலகில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவை பெறுவது கட்டாய தேவைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

எது எப்படியோ இன்று இணையத்தின் ஊடாக கிடைக்கக்கூடிய சேவைகளோ ஏராளம் அந்த வகையில் நாம் இணையத்தின் ஊடாக இலவச மின்னசல் சேவையை பெற்றுக்கொள்ள ஏராளமான நிறுவனங்கள் துணை புரிகின்றன.அவற்றுள் இன்று அதிகமானோர் பயன்படுத்துவது கூகுள் வழங்கும் ஜிமெயில் எனும் மின்னஞ்சல் சேவையை ஆகும். இதற்கு ஆண்ட்ராய்டின் வருகையும் முக்கிய காரணமாகும்.

சில சந்தர்பங்களில் நாம் மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பிய பின் அது அனுப்பபடாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணுவதுண்டு.  இதற்கு பல்வேறு காரணங்கள் அடிப்படையாக அமையலாம் உதாரணத்திற்கு ஒரு சில பின்வருமாறு.


  • குறிப்பிட்ட மின்னஞ்சலில் சேர்க்க வேண்டிய தகவல் ஒன்றினை அல்லது புகைப்படங்கள், ஆவணங்கள் போன்ற  ஒன்றினை நாம் இணைக்க மறந்திருக்கலாம்.
  • ஒருவருக்கு அனுப்ப வேண்டிய இரகசியமான தகவல் ஒன்றினை மின்னஞ்சல் முகவரி தவறுதலாக உள்ளிடப்பட்டதால் இன்னும் ஒருவருக்கு நாம் அனுப்பி இருக்கலாம்.
  • அல்லது நாம் அனுப்பிய செய்தி அதனை பெறுபவருக்கு பொருத்தமற்றது என நாம் எண்ணியிருக்கலாம்.


இது போன்ற இன்னும் பல சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சலை அனுப்பப்படாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என் எண்ணுவதுண்டு.

எனவே நாம் அனுப்பிய மின்னஞ்சலை ஆகக்கூடியது 30 செக்கன்களுக்குள் தடுத்து நிறுத்த உதவுகின்றது Gmail இன் புதிய வசதி.

இதனை நீங்களும் செயற்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.


  • முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கிற்குள் நுழைந்துக்கொள்க.
  • பின் வலது மேல் மூலையில் இருக்கும் Gear iCon ஐ சுட்டுவதன் ஊடாக Settings பகுதிக்கு செல்க.
Gmail அமைப்பு

  • இனி General எனும் பிரிவுக்குக் கீழ் Undo என ஒரு வசதி தரப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
Gmail settings இடைமுகம்

  • பின் அதற்கு நேரே உள்ள Enable Undo Send என்பதில் ஒரு Tick அடையாளத்தை இட்டு Send cancellation period என்பதில் 30 செக்கன்கள் என்பதனை தெரிவு செய்க.
  • இனி இறுதியாக குறிப்பிட்ட பக்கத்தின் கீழ் பகுதிக்க்குச் சென்று Save Changes என்பதை சுட்டுக.
  • அவ்வளவு தான் இனி Undo Send வசதி உங்கள் கணக்கிற்கும் செயற்படுத்தப்பட்டு விட்டது.

Undo ஜிமெயில்

இனி மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பிய பின் உங்கள் மின்னஞ்சலுக்கான பக்கத்தின் மேல் பகுதியில் 30 செக்கன்கள் வரை Undo எனும் வசதி தோன்றும் எனவே நீங்கள் அந்த மின்னஞ்சல் குறிப்பிட்ட நபரை செல்லாமல் தடை செய்ய வேண்டும் எனின் Undo என்பதனை சுட்ட வேண்டியது தான்.

நீங்கள் Android, iOS போன்ற Smart சாதனங்களின் ஊடாக இணையத்தை பயன்படுத்துபவர் எனின் Inbox எனும் செயலியை உங்கள் Smart சாதனத்தில் நிறுவுதன் மூலம் இந்த UNDO வசதியை பெற்றுக்கொள்ளலாம்.

Inbox என்பது மின்னஞ்சல் சேவையை புதிய தோற்றத்திலும் அதிக வசதிகளுடனும் Gmail பயனர்களுக்கு வழங்குவதற்காக Google ஆல் ஆரம்பிக்கப்பட்டதாகும். இது பற்றி எமது முகநூல் பக்கத்தில் நாம் ஏற்கனவே பதிவுகளை எழுதி இருந்தோம்.

பின்வரும் இணைப்புகள் மூலம் Inbox செயலியை உங்கள் Smart சாதனங்களுக்கு தரவிறக்கிக் கொள்ளலாம்.

மேலும் இதனையும் பார்க்க: நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் படிக்கப்பட்டு விட்டதா....? என்பதனை அறிந்துகொள்வது எவ்வாறு?


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top