நாளுக்கு நாள் Smart Phone பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேலை அதில் Android இற்கு பெரும் ஒரு பங்கும் உண்டு.

Power Cleaner Android செயலி


இன்றைய Smart சாதனகளானது வெறும் அழைப்புக்களை மேற்கொள்வதற்கு மாத்திரமின்றி அதனூடாக இணையத்தை பயன்படுத்துவதற்கும் புகைப்படங்களை எடுப்பதற்கும் மின்னூல்களை (E-Book) வாசிப்பதற்கும் என பல தேவைகளுக்கு பயன்படுகின்றது.

ஏதாவது ஒன்றினை நாம் தொடர்ச்சியாக பயன்படுத்துகையில் அதன் மூலம் நாம் பெரும் எல்லைப் பயனானது தொடர்ச்சியாக குறையும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை ஆகும் இது இன்றைய Smart Phone களுக்கும் விதி விலக்கல்ல.

எனவே நாம் பயன்படுத்தும் Smart சாதனங்களானது தொடர்ச்சியாக பயன்படுத்துகையில் அதன் செயற்திறன் குறைந்து செல்வதை அவதானிக்கலாம்.

இது போன்ற சந்தர்பங்களில் எமது Smart சாதனங்களில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து நீக்கிக்கொள்ள ஏராளமான செயலிகள் உள்ளன.

என்றாலும் அவற்றுள் அனைத்தும் சிறந்தவைகள் என கூறி விட முடியாது.

அந்த வகையில் உங்கள் Smart Phone இன் வேகத்தை தொடர்ச்சியாக பேண உதவும் Mobile CareClean Mater மற்றும் The Cleaner போன்ற எனும் செயலி பற்றி எமது முன்னைய பதிவுகளில் பார்த்திருந்தோம்.

அதே போல் சிறந்த பயனையும் வசதிகளையும் தரக்கூடிய ஒரு செயலியே Power Cleaner எனும் செயலியும் ஆகும்.


Power Cleaner இலவச செயலியும்

Power Cleaner எனும் இந்த Android சாதனத்துக்கான  செயலி மூலம் பின்வரும் பயன்களை பெறலாம்.

Junk Cleaner & Memory Boost

உங்கள் Android சாதனத்தில் உள்ள தேவையற்ற கோப்புக்களை நீக்கி உங்கள் Android சாதனத்தின் நினைவகத்தை மீதப்படுத்தி தருவதுடன் அவசியம் இன்றி பின்புலத்தில் இயங்கக்கூடிய செயலிகளின் செயற்பாட்டை முடக்குகின்றது. இதன் மூலம் உங்கள் Android சாதனம் வேகமாக இயங்குவதற்கு போதுமான சக்தியை பெறுகின்றது.


Device Information

அத்துடன் இந்த செயலியில் தரப்பட்டுள்ள Device Information எனும் பகுதியின் மூலம் உங்கள் Android சாதனம் தொடர்பான அத்தனை தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். அதாவது உங்கள் சாதனத்தின் CPU இன் வேகம் என்ன, RAM நினைவகத்தின் அளவு என்ன, GPU, முன் பக்க Camera, பிரதான Camera, நினைவகம், ROM, Battery, CPU மற்றும் Battery போன்றவற்றின் வெப்பநிலை என இது போன்ற ஏராளமான தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.


APP Manager

அத்துடன் இதில் தரப்பட்டுள்ள APP Manager எனும் பகுதி மூலம் உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து செயலிகளையும் நிர்வகிக்கலாம்.

இதில் தரப்பட்டுள்ள APP Manager மூலம் பின்வரும் வசதிகளை பெறலாம். 

  • ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகளை நீக்கிக்கொள்ள முடியும். (Batch uninstaller)

  • உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை Backup செய்துகொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் Android சாதனம் Reset செய்யப்பட்டாலோ அல்லது புதியதொரு Android சாதனத்தை நீங்கள் கொள்வனவு செய்திருந்தாலோ அவற்றுக்கு இந்த Backup கோப்புக்களை நிறுவுவதன் மூலம் குறிப்பிட்ட செயலிகளை மீளவும் பயன்படுத்திக்கொள்ள முடியும் Play Store இலிருந்து தரவிறக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • மேலும் உங்கள் Android சாதனத்தில் உள்ள செயலிகளை ஏனையவர்கள் பயன்படுத்த முடியாத வகையில் Lock செய்ய முடியும்.
  • அத்துடன் உங்கள் சாதனத்தின் உள்ளக நினைவகத்தில் நிறுவப்பட்டுள்ள செயலிகளை ஒரே நேரத்தில் தெரிவு செய்து உங்கள் Memory Card இற்கு நகர்திக்கொள்ள முடியும்.

இது போன்ற ஏராளமான வசதிகளை தரும் இந்த செயலியை உங்கள் Android சாதனத்துக்கும் தரவிறக்கி நிறுவிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top