எமது கணினியில் இருக்கக்கூடிய கோப்புக்கள் தேவையற்றது என நாம் கருதும் போது அவற்றினை நீக்கி விடுவோம் அல்லவா? அல்லது சில கோப்புக்களை தவறுதலாகவோ, மறதியாகவோ எம்மை அறியாமலேயே நீக்கி விடுவோம்.

MiniTool Power Data Recovery எனும் மென்பொருள் இலவசமாக


அவ்வாறு நீங்கள் நீக்கிய கோப்புக்கள் பின்னர் ஒரு சந்தர்பத்தில் தேவைப்பட்டால் என்ன செய்வது.? சில வேலை Recycle Bin ஐ நாம் சுத்தப்படுத்தாமல் வைத்திருந்தால் மீளவும் பெற்றுக்கொள்ளலாம். இல்லை எனில் நமது கதி அந்தோ கதி தான் என்கிறீர்களா?

இல்லை...! இல்லை....! இது போன்ற சந்தர்பங்களில் உங்களுக்கு உதவுகின்றது MiniTool Power Data Recovery எனும் மென்பொருள்.


MiniTool Power Data Recovery எனும் இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து வகையான கோப்புக்களையும் மீள பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த மென்பொருள் மூலம் பின்வரும் வசதிகளை பெறலாம்.1. Undelete Recovery:
  • இந்த மென்பொருளின் முகப்புப் பக்கத்தில் தரப்பட்டுள்ள Undelete Recovery என்பதனை சுட்டுவதன் மூலம் உங்கள் கணினியில் இருந்து நீக்கப்பட்ட கோப்புக்களை மேலோட்டமாக சோதிப்பதன் மூலமாக விரைவில் மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.


2. Lost Partition Recovery
  • கணினி வைரஸ்கள் காரணமாகவோ அல்லது உங்கள் கணினி வன்தட்டில் (Hard Disk) ஏற்பட்ட ஒரு திடீர் மாற்றத்தாலோ உங்கள் கணினியின் ஒரு வன்தட்டின் பாகத்தில் இருந்து அழிந்து விட்ட கோப்புக்களை மீள பெற்றுக் கொள்வதற்காக Lost Partition Recovery எனும் வசதி இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது.


3. Digital Media Recovery
  • மேலும் இதில் தரப்பட்டுள்ள Digital Media Recovery எனும் பகுதி மூலம் உங்கள் USB சாதனங்கள் மற்றும் Memory Card போன்றவற்றில் இருந்து நீங்கள் இழந்த உங்கள் புகைப்படங்கள், ஆவணங்கள், Audio, மற்றும் வீடியோ கோப்புக்களை மீள பெற்றுக்கொள்ள முடியும்.


4. CD/DVD Recovery
  • அதே போல் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள CD/DVD Recovery என்பதன் மூலம் மீள எழுத முடியுமான இறுவட்டுக்களில் (Re Writable CD/DVD) இருந்து நீங்கள் இழந்த கோப்புக்களை மீள பெற்றுக்கொள்ள முடியும்.

5. Delete Partition Recovery
  • மேலும் நீங்கள் உங்கள் கணினிக்கு புதிய இயங்குதளம் நிறுவியதன் காரணமாக உங்கள் வன்தட்டின் ஒரு பாகத்தில் இருந்து நீங்கள் இழந்த கோப்புக்களை Delete Partition Recovery எனும் இந்த பகுதி மூலம் மீள பெற்றுக்கொள்ள முடியும். இதன் போது உங்கள் கணினி ஆழமாக சோதனைக்கு உட்படும்.

சிக்கல் அற்ற எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை கணினியை பயன்படுத்தும் எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதன் மூலம் நீங்கள் இழந்த தகவல்களை மீட்க முற்படும் போது மேற்குறிப்பிட்ட வகையில் தரவுகளை மீட்பதற்கு பொருத்தமான முறையை தெரிவு செய்த பின் அடுத்து தோன்றும் சாளரத்தில் Settings என்பதனை சுட்டுவதன் மூலம் நீங்கள் எவ்வாறான தகவல்களை மீட்க முற்படுகின்றீர்களோ அவற்றினை தெரிவு செய்ய முடியும்.

MiniTool Power Data Recovery அமைப்பு

உதாரணத்திற்கு (E.g): USB சாதனம் ஒன்றில் இருந்து நீங்கள் இழந்த புகைப்படங்களை மாத்திரம் மீள பெற்றுக்கொள்ள வேண்டும் எனின் Digital Media Recovery என்பதனை சுட்டும் போது தோன்றும் அடுத்த சாளரத்தில் உங்கள் USB சாதனத்தை தெரிவு செய்து (1) Settings என்பதனை சுட்ட வேண்டும் (2). பிறகு பெறப்படும் சிறிய சாளரத்தில் Graphic & Picture (3) தெரிவு செய்த பின்  Full Scan (4) என்பதனை அழுத்தி குறிப்பிட்ட USB சாதனத்தில் இருந்து நீங்கள் இழந்த அனைத்து புகைப்படங்களையும் மீள பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு பெற்றுக்கொண்ட அனைத்தும் குறிப்பிட்ட மென்பொருளில் பட்டியல் படுத்தப்படும். 

அவ்வாறு பட்டிய படுத்தப்படும் முடிவுகளில் ஆயிரக்கணக்கான முடிவுகளும் இருக்கலாம் எனவே நீங்கள் தேடும் அந்த கோப்பினை சரியாக இனங்கண்டு பெற்றுக்கொள்வதற்காக இதில் Filter வசதியும் (1) தரப்பட்டுள்ளது.

MiniTool Power Data Recovery இலவச மென்பொருள்

இந்த Filter வசதி மூலம் நீங்கள் தேடும் கோப்பு உருவாக்கப்பட்ட திகதி, (2) அதன் அளவு, (3) அதன் வகை (4) என்பவற்றை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் இழந்த கோப்பை சரியாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

அவ்வாறு நீங்கள் குறிப்பிட்ட கோப்புகளை அடையாளம் கண்ட பின்னர்  உங்களுக்குத் தேவையானவற்றை மாத்திரம் தெரிவு செய்து கணினியில் சேமித்துக்கொள்ள முடியும்.

அந்தவகையில் நீங்கள் இழந்த கோப்புக்களை மிக வேகமாக மீள பெற்றுக்கொள்ள உதவும் இந்த மென்பொருளானது இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ளும் வகையில் பல்வேறு பதிப்புக்களை கொண்டுள்ளது. இதனை Compare License Type எனும் பக்கத்தின் மூலம் அறியலாம்.


இதன் இலவச பதிப்பின் மூலம் வெறும் 1 GB அளவுடைய தரவுகளை மாத்திரமே மீள பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு மேல் பயன்படுத்துவதெனின் குறிப்பிட்ட மென்பொருளை கட்டணம் செலுத்தியே பெற வேண்டும்.

இருப்பினும் 69 அமெரிக்க டொலர் பெறுமதியான கட்டணம் செலுத்தி பெறவேண்டிய Personal பதிப்பை Tamilinfotech வாசகர்களுக்கு இலவசமாக வழங்க MiniTool நிறுவனம் முன்வந்துள்ளது.

இதனை தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பை சுட்டுக.பின்வரும் இணைப்பு மூலம் இலவச Licence Key ஐ பெற்றுக்கொள்ளலாம்.

Free Licence Code For Tamilinfotech Readers 


தனிப்பட்ட பாவனைக்கு அப்பாற்பட்டு வணிக பாவனைக்காக இன்னும் அதிக வசதிகளுடன் நீங்கள் இதனை பயன்படுத்த விரும்பினால் இதனை கொள்வனவு செவதற்கும் இந்த மென்பொருள் பற்றி மேலும் அறியவும் கீழுள்ள இணைப்பில் செல்க.

Home Page

Product Page

 Compare Licenseமேலும் இதனையும் பார்க்க: Microsoft தரும் OneNote எனும் சேவையை தற்பொழுது முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் (Windows, Android, iOS, Etc...)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top