HI






எமக்குத் தேவையான ஆவணங்களை மிக இலகுவாகவும் நேர்த்தியாகவும் தயாரித்துக்கொள்ள Microsoft Office மென்பொருள் உதவுகின்றது.

Microsoft Word செயலி

இது அனைவராலும் அறியப்பட்ட ஏராளமான வசதிகளை தரக்கூடிய ஒரு மென்பொருளாகும்.

ஆரம்பத்தில் இது அதிகமாக கணினி மூலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இன்று நேரடியாக இணையத்தின் மூலம் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். மேலும் இன்று வேகமாக வளர்ந்து வரும் Smart சாதனங்களிலும் இது உலா வருகின்றது.


அந்த வகையில் Microsoft Office மென்பொருளின் Smart சாதங்களுக்கான பதிப்பு ஏற்கனவே அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும்  Microsoft Office எனும் ஒரே செயலியில் Word, Excel, மற்றும் PowerPoint என மூன்றும் தரப்பட்டு வரையறுக்கப்பட்ட வசதியே தரப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்பொழுது Microsoft நிறுவனத்தால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள செயலிகளானது Microsoft Word, Excel, PowerPoint என மூன்று பிரிவுகளுக்கும் வெவ்வேறான செயலிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் ஏராளமான வசதிகளை பெற முடிகின்றது.


கணினியில் தரப்பட்டுள்ள  Microsoft Office மென்பொருளுக்கு ஈடான வகையில் ஏராளமான பல வசதிகள் தரப்பட்டுள்ள இந்த Smart சாதனத்துக்கான செயலிகள் மூலம் நீங்கள் ஆவணங்களை உருவாக்கும் போது Charts, Animations, SmartArt Graphic,s Shapes, Images, Footnotes, Formulas, Tables போன்ற எந்த ஒன்றினையும் இணைத்துக்கொள்ள முடியும்.

எந்த ஒரு நேரத்திலும் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும், எந்த ஒரு Smart சாதனத்தை பயன்படுத்தியும் உங்களுக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்கிக் கொள்ளவும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆவணங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும். இதற்கான சாத்தியத்தை இணைய சேமிப்பக வசதியின் மூலம் Microsoft நிறுவனம் அதன் Microsoft Office பயனர்களுக்கு உருவாக்கி உள்ளது.

மேலும் நீங்கள் உருவாக்கும் ஆவணங்களை Microsoft இன் One Drive சேமிப்பகத்தில் மாத்திரம் அல்லாமல் SharePoint, Google Drive, Box, Drop Box என எந்த ஒரு இணைய சேமிப்பகத்திலும் சேமித்துக்கொள்ளவும் பிறகொரு சந்தர்பத்தில் அவைகள் தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

பின்வரும் இணைப்புகள் மூலம் இவற்றினை உங்கள் Smart சாதனத்துக்கு தரவிறக்கி பயன்படுத்தலாம்.

Microsoft Office For Android Smart Phone 

Word 


Microsoft Office For iOS 





மேலும் இதனையும் பார்க்க: Microsoft Excel தொகுப்பை இணையத்தின் மூலம் கற்றுக்கொள்ள உதவும் இணையதளங்கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top