எமது கணினியில் இருக்கக்கூடிய வைரஸ் கோப்புக்கள் காரணமாகவோ அல்லது நாம் எமது கணினிக்கு மென்பொருள்களை நிறுவும் போதோ அதனோடு இணைந்தாட் போல் நிறுவப்படும் Tool Bar, Extension போன்றவைகள் மூலம் எமது கணினியின் வேகம் பாதிக்கப்படலாம்.

AdwCleaner இலவச கணினி மென்பொருள்.


இவ்வாறு தேவையற்ற Tool Bar, Extension போன்றவைகள் எமது இணைய உலாவியிலேயே நிறுவப்படுகின்றது. இதனால் நாம் இணையத்தை உலாவரும் போது தோவையற்ற விளம்பரபரங்கள் தோன்றுவதுடன் இணைய உலாவியும் நிலைகுலைய (Stuck) வாய்ப்புண்டு. சில சந்தர்பங்களில் எமது இணைய உலாவியின் முகப்புப் பக்கமும் மாறியிருக்கும்.எனவே உங்கள் இணைய உலாவியில் இருக்கும் தேவையற்ற அம்சங்களை நீக்கி இணையத்தை பாதுகாப்புடன் வேகமாக உலாவருவதற்கு உதவுகின்றது AdwCleaner எனும் இலவச கணினி மென்பொருள்.


இந்த மென்பொருளை நிறுவிய பின் உங்கள் கணினியை சோதிப்பதன் மூலம் மேற்கூறிய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை பெறலாம்.

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ள இந்த மென்பொருளானது இலவசமாகவே கிடைக்கின்றது.

மேலும் இதில் தரப்பட்டுள்ள Search எனும் Button ஐ ஒரு முறை சுட்டுவதன் மூலம் உங்கள் இணைய உலாவியில் இருக்கும் அனைத்து குறைபாடுகளையும் கண்டறிந்து நீக்கிக்கொள்ள முடியும்.

3 MB இற்கும் குறைவான அளவையே கொண்டுள்ள இந்த மென்பொருளை தரவிறக்குவது இலகு. அத்துடன் இதனை கணினியில் நிறுவ வேண்டிய அவசியமும் இல்லை. தரவிறக்கிய பின் குறிப்பிட்ட மென்பொருளை Double Click செய்வதன் மூலம் நேரடியாக திறந்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நீங்களும் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.


மேலும் இதனையும் பார்க்க: Google Chrome இணைய உலாவி அடிக்கடி உறைவதை (stuck) தடுக்கும் நீட்சி (Extension)


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top