உலகின் மிகச்சிறந்த இணைய உலாவிகளில் Firefox இணைய உலாவியும் ஒன்றாகும். 

Firefox வீடியோ அழைப்பு

Microsoft இன் இணைய உலாவியான Internet Explorer ஐ இன்று அதிகமானோர் கை விட்டுள்ள நிலையில் Google Chrome, Opera மற்றும் Firefox இணைய உலாவிகளையே அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே சிறந்த வேகத்துடன் காலத்துக்குக் காலம் புத்துப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதில் இம்மூன்று இணைய உலாவிகளும் ஒன்றை ஒன்று சளைத்ததல்ல! 

அந்த வகையில் Firefox இணைய உலாவியில் Firefox Hello எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது Mozilla நிறுவனம்.

இந்த வசதி மூலம் Firefox இணைய உலாவியை பயன்படுத்தும் பயனர்களுக்கு இடையில் மிக இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.

அதாவது உங்கள் Firefox இணைய உலாவிக்கு Firefox Hello எனும் வசதியை செயற்படுத்தியதன் பின்னர் பெறப்படும் இணைப்பினை Firefox இணைய உலாவியினை பயன்படுத்தும் உங்கள் நண்பருக்கு வழங்கியதன் பின் உங்கள் இருவருக்கும் மத்தியில் வீடியோ உரையாடலில் ஈடுபடலாம். இதற்கு எவ்வித கணக்குகளையும் துவங்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.


  • நீங்களும் Firefox Hello வசதியை உங்கள் இணைய உலாவிக்கு செயற்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் சென்று Try Firefox Hello என்பதனை சுட்டுக.
  • இனி உங்கள் Firefox இணைய உலாவியின் வலது மேல் மூலையில் சிறியதொரு iCon நிறுவப்பட்டு அதிலிருந்து ஒரு சாளரம் தோன்றும். படத்தில் உள்ளவாறு.
Firefox இணைய உலாவியில் Firefox Hello

  • பின் Get Started என்பதனை அழுத்தி Start Conversion என்பதனை அழுத்த வேண்டும். இதன் போது உங்கள் கணினியில் உள்ள Webcam இயக்கப்பட்டு குறிப்பிட்ட இணைய உலாவியின் வலது கீழ் மூலையில் புதியதொரு சாளரம் தோன்றுவதனை அவதானிக்கலாம்.
Firefox Hello வீடியோ அழைப்பு மேற்கொள்ள


இனி அதில் Copy Link என ஒரு Button தரப்பட்டிருக்கும் அதனை Copy செய்து உங்கள் நண்பருக்கு அந்த இணைப்பை வழங்குவதன் மூலம் இருவருக்கு மத்தியில் மிக இலகுவாக வீடியோ உரையாடலை மேற்கொள்ள முடியும்.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top