பொதுவாக கணினியானது புதிதாக இயங்குதளம் நிறுவப்பட்டு சில நாட்களுக்கு வேகாமாக இயங்கும் பின் அதனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைந்து செல்வது அனைவராலும் அறியப்பட்ட உண்மையாகும்.

Wise Memory Optimizer கணினி மென்பொருள்.


இதற்கு பல காரணங்கள் உண்டு இருப்பினும் நாம் அதனை சரியாக பராமரிப்பதன் மூலம் அதன் வேகத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.

அந்த வகையில் நாம் எமது கணினியில் அதிகமான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தும் போது  எமது கணினியில் உள்ள RAM நினைவகம் அதிகமாக பயன்படுத்தப்படுவதால் எமது கணனியின் வேகம் குறைந்து மந்த கதியில் இயங்கத்துவங்குகின்றது.

எனவே தேவையற்ற மென்பொருள்களால் எமது கணினியின் RAM நினைவகம் பயன்படுத்தப்படுவதை தவிர்த்து கணினியை வேகமான இயக்கத்திற்கு உதவுகின்றது Wise Memory Optimizer எனும் இலவச கணினி மென்பொருள்.

பயன்படுத்துவதற்கு இலகுவான முறையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது அதன் பிரதான முகப்புப் பக்கத்தில் உங்கள் கணினியில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் RAM நினைவகத்தையும் பயன்படுத்தப்படாமல் எந்த அளவு RAM நினைவகம் உள்ளது என்பதனையும் காட்டுகின்றது.

மேலும் அதன் பிரதான இடைமுகத்தில் தரப்பட்டுள்ள Optimize Now என்பதனை சுட்டுவதன் மூலம் உங்கள் கணினியில் தேவையற்ற மென்பொருள்களால் பயன்படுத்தப்படும் RAM நினைவகம் சேமிக்கப்படும் இவ்வாறு சேமிக்கப்படும் RAM நினைவகம் காரணமாக உங்கள் கணினி வேகமாக இயங்கத்துவங்கும்.


நீங்கள் கணினியை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது இதனை அடிக்கடி திறந்து பயன்படுத்தும் சிரமத்தை தீர்க்க இதில் Automatic Optimize எனும் வசதி தரப்பட்டுள்ளது.மேற்கூறிய வசதி மூலம் உங்கள் கணினியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நினைவகத்தின் அளவு குறிப்பிட்ட ஒரு அளவை பார்க்கிலும் குறையும் போது தானாகாவே RAM நினைவகத்தை சேமிக்கும் வசதி இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது. இது எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை குறிப்பிட்ட மென்பொருளின் Settings பகுதியின் ஊடாக அமைத்துக் கொள்ளலாம்.

Wise Memory Optimizer இடைமுகம்மேலும் அதன் Setting பகுதியில் தரப்பட்டுள்ள Run it when windows start என்பதில் Tick செய்வதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருள் கணினி துவங்கும் போதே இயங்கும் வகையில் அமைத்துக்கொள்ள முடியும். உங்களை அறியாமலே உங்கள் கணினி பராமரிக்கப்படும்.


எந்த ஒரு கணினியிலும் மிக இலகுவாக நிறுவி பயன்படுத்த முடியுமான இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி நிறுவ விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top