உங்கள் Android சாதனத்தை எப்பொழுதும் ஒரே தோற்றத்தில் பார்த்து சலித்து விட்டீர்களா?

Walloid Android செயலி

அப்படியாயின் அழகிய புகைப்படங்களை உங்கள் Android சாதனத்துக்கு பின்புலப் படங்களாக இட்டு அதனை அலங்கரித்துக் கொள்ள உதவுகின்றது Walloid எனும் Android சாதனத்துக்கான செயலி.மிக எளிமையான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியானது வெவ்வேறு பட்ட Smart சாதனங்களுக்கு என வெவ்வேறு வகையான பின்புலப் படங்களை கொண்டுள்ளது.

அதாவது நீங்கள் பயன்படுத்துவது Samsung Galaxy S3 எனின் அதற்கு ஏற்றவாறான பின்புலப் படங்களை மாத்திரம் தெரிவு செய்து தரவிறக்கிக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது. 

Walloid பின்புலப்படம்


இது போல் Samsung, LG, HTC, Sony என்பது போன்ற 20 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 100 இற்கும் அதிகமான Smart சாதனங்களுக்கான 3800 இற்கும் மேற்பட்ட பின்புலப் படங்களை இதிலிருந்து பெற முடியும். அத்துடன் இவைகள் அன்றாடம் புதுப்பிக்கப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நீங்கள் இதிலிருந்து தரவிறக்கும் பின்புலப் படங்களின் தரத்தினை (HD or Standard) தெரிவு செய்து கொள்ளவும் உங்கள் Smart சாதனத்துடைய Screen Resolution ஐ தெரிவு செய்து கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. 

இதனை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

மேலும் இதனையும் பார்க்க: உங்கள் அழகிய Android சாதனத்துக்கு மேலும் அழகு சேர்க்க உதவும் அழகிய ஆறு Icon Packs இலவசமாகLove to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top