Format Factory எனும் மென்பொருளானது எமது கணினியில் இருக்கக்கூடிய Audio மற்றும் வீடியோ கோப்புக்களை ஒரு வடிவத்தில் இருந்து இன்னும் ஒரு வடிவத்திற்கு மிக வேகமாக மாற்றித்தருகின்றது.

Format Factory இலவச மென்பொருள்


மேலும் CD/DVD இறுவட்டுக்களில் இருந்து Audio, வீடியோ கோப்புக்களை வேறு பிரித்து பெற்றுக்கொள்ள உதவுவதுடன் புகைப்படங்களையும் ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள உதவுகின்றது.

மேலும் உங்கள் Audio மற்று வீடியோ கோப்புக்களை இந்த மென்பொருளின் ஊடாகவே ஒன்றினத்துக் கொள்ளவும் வேறுபிரித்துக் கொள்ளவும் முடியும்.


இவைகள் தவிர ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களுக்கு Rename செய்யும் வசதியும் குறிப்பிட்ட ஒரு Multimedia கோப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் முடிகிறது.

இந்த மென்பொருள் மூலம் பெற முடியுமான முக்கிய வசதிகள்.

  • இந்த மென்பொருள் மூலம் எந்த ஒரு வீடியோ கோப்பினையும் iPhone, iPad மற்றும் Android சாதனங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற வடிவில் மாற்றித்தருவதுடன் MP4, 3GP, AVI, GIF, WMV, RMVB, MKV, VOB, MOV, MPG, FLV, SWF போன்ற கணினியில் இயங்கக்கூடிய வடிவங்களுக்கும் மாற்றித்தருகின்றது.
  • எந்த ஒரு Audio கோப்பினையும் MP3, FLAC, WMA, AAC, AMR, M4A, MMF, M4R, WAV, OGG, WavPack போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
  • எந்த ஒரு புகைப்படத்தினையும்  JPG, ICO, BMP, PNG, GIF, TGA, TIF, PCX போன்ற வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
  • புகைப்படங்களில் Zoom, Flip, Rotate, Resize போன்ற மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

கணினியை பயன்படுத்தும் எந்த ஒருவராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியுமான இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Download Format Factory 


கவனத்திற்கு: இந்த மென்பொருள் நிறுவப்பட்ட பின் தோன்றும் சாளரங்களை Decline/Cancel செய்வதன் மூலம் அவைகள் நிறுவப்படுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அவைகள் மூலம் Ask Tool bar, Opera, WinZip போன்ற தேவையற்ற மென்பொருள்கள் உங்கள் கணினியில் நிறுவப்படலாம்.

Ask Tool Bar தேவையற்றது


மேலும் இதனையும் பார்க்க: Video கோப்புக்களை 200 க்கும் மேற்பட்ட வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள உதவும் கட்டண மென்பொருளுக்கு ஈடான ஒரு இலவச மென்பொருள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top