ஆச்சரியம், சுவாரஷ்யம் மற்றும் வேடிக்கை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. 

Tamilinfotech ஆச்சரிய முகப்பு


நாம் எப்பொழுதும் எமது பதிவுகள் மூலம் பல்வேறு தகவல்களையே தந்து வந்தோம். ஆனால் இன்று சற்று வேறுபட்டு ஒரு சுவாரஷ்யமான பதிவை தர இருக்கின்றோம். 


NetDisaster எனும் சிறிய மென்பொருளானது ஏராளமான சுவாரஷ்யமான செயற்பாடுகளை உங்கள் கணினியின் திரையில் மேற்கொள்ள வழிவகுக்கின்றது.

இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் கணினியின் திரையில் ஏராளமான விளைவுகளை ஏற்படுத்த முடியும். 

 • உங்கள் கணினியின் திரையை துப்பாக்கியால் சுடுவது போன்று, 
 • பறக்கும் தட்டுகள் உங்கள் கணினியின் திரையை சேதப்படுத்துவது போன்று,
 •  மரம் அறுக்கும் இயந்திரத்தால் உங்கள் கணினியின் திரையை வெட்டுவது போன்று, 
 • உங்கள் கணினியின் திரையை டைனோசர் ஒன்று கடந்து செல்வது போன்று, 
 • திரையில் அழகிய மலர்கள் மலர்வது போன்று,
NetDisaster by tamilinfotech

 • தேனீக்கள் வட்டம் இடுவது போன்று, நத்தைகள் நகருவது போன்று, 
 • முட்டைகள் வெடிப்பது போன்று, 
 • கோப்பி சிந்தியது போன்று, 
 • தக்காளி கனிகள் வெடிப்பது போன்று, 
 • குழந்தை கீறுவது போன்று, 
 • சிறுவன் சிறுநீர் கழிப்பது போன்று, 
 • மக்கள் ஆர்பாட்டம் செய்வது போன்று என இன்னும் ஏராளமான விளைவுகளை இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணினியின் திரையில் ஏற்படுத்தலாம்.
ஏற்படும் விளைவுகளை ஒலி வடிவத்திலும் கேற்க முடிகின்றமை இதன் விசேட அம்சமாகும்.


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த மென்பொருள் குதூகலம் அடைய செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

4.4 Mb அளவுடைய இந்த சுவாரஷ்யமான மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.மேலும் பல பயனுள்ள பதிவுகளை தொடர்ச்சியாக பெற்றிட Facebook மற்றும் Google Plus போன்ற எமது சமூக வலைதளங்களின் ஊடாக தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top