HI





Google Chrome இணைய உலாவியானது இன்று அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு சிறந்த இணைய உலாவி ஆகும்.

The Great Suspender நீட்சி

இந்த இணைய உலாவி (Web Browser) நாம் இணையத்தை உலா வருகையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஏராளமான தாவல்களை (Tab) திறந்து பயன்படுத்தும் சந்தர்பங்களும் உண்டு.

இது போன்று நாம் ஒரே நேரத்தில் அதிகமான தாவல்களை திறந்து  பயன்படுத்தும் போது குறிப்பிட்ட இணைய உலாவியினால் Ram நினைவகம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.



இதனால் நாம் பயன்படுத்தும் இணைய உலாவியானது சிறிது நேரத்திலேயே உறைந்து எம்மை எரிச்சல் அடைய செய்யும் சந்தர்பங்களும் உண்டு.

இவ்வாறு இணைய உலாவி உறைவதனை தவிர்க்க என்ன செய்யலாம்?

குறிப்பிட்ட இணைய உலாவியில் நாம் அதிகமான தாவல்களை திறந்து பயன்படுத்தும் போது, அவற்றுள் அதிக நேரம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தாவல்களை முடக்கி வைத்து தேவைப்படும் போது பின்னர் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றது The Great Suspender எனும் இணைய உலாவிக்கான நீட்சி (Extension)


இதனால் குறிப்பிட்ட இணைய உலாவி மூலம் தடையற்ற இணைய உலாவலை மேற்கொள்ள முடிவதுடன் மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு வீணே விரயமாகும் Battery இன் சக்தியை மீதபடுத்திக்கொள்ளவும் முடியும்.

நீங்களும் இதனை உங்கள் Google Chrome இணைய உலாவிக்கு தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க 


The Great Suspender நீட்சியை நிர்வகிப்பது எவ்வாறு?

  • இந்த நீட்சியை உங்கள் இணைய உலாவிக்கு நிறுவிய பின் குறிப்பிட்ட இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தோன்றும் The Great Suspender நீட்சியை சுட்டுவதன் மூலம் திறக்கப்பட்டிருக்கும் ஒரு தாவலில் நீங்கள் விரும்பும் ஒரு தாவலை முடக்கவும் பின் அது தேவைப்படும் போது மீள இயங்கச்செய்யவும் முடியும்.
  • மேலும் நீங்கள் குறிப்பிட்ட ஒரு தாவலினை ஒரு மணித்தியாலத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பின் குறிப்பிட்ட தாவலனது இந்த நீட்சியால் தானாகவே முடக்கப்படும் பின் நீங்கள் அதனை பயன்படுத்த விரும்பும் போது Click to reload என்பதனை சுட்டுவதன் மூலம் அதனை மீளவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
  • இந்த நீட்சியின் Settings பகுதி மூலம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு தாவல் எவ்வளவு நேரத்திற்கு பிறகு முடக்கப்படவேண்டும் என்பதனை தெரிவுசெய்து கொள்ள முடியும். ஆகக் குறைந்தது திறக்கப்பட்டு 20 செக்கன்கள் தொடக்கம் ஆகக் கூடியது 3 நாட்கள் வரையும் தெரிவு செய்ய முடியும்.




Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top