HI






முடியும் என்றால் உறங்கிப்பாருங்கள், உங்களை துயில் எழச் செய்யாமல் நான் ஓய மாட்டேன் என்கிறது Alarmy எனும் Android சாதனத்துக்கான செயலி

 Alarmy செயலி


இது போன்றதொரு சுவாரஷ்யமான SpinMe செயலியை நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் அதாவது குறிப்பிட்ட செயலியில் ஒலிக்கும் அலாரத்தை நிறுத்த வேண்டும் எனின் நீங்கள் துயில் எழுந்து உங்களை நீங்களே இரு முறை சுற்றியே ஆக வேண்டும் இல்லையெனில் அலாரம் நிறுத்தப்படமாட்டாது.

அது போன்றதொரு சுவாரஷ்யமான செயலியே இதுவும் ஆகும்.


இதன் மூலம் ஒலிக்கும் அலாரத்தை நிறுத்த வேண்டும் எனின் குறிப்பிட்ட ஒரு இடத்தை புகைப்படம் எடுத்தே ஆக வேண்டும். அதாவது Alarmy எனும் செயலியை பயன்படுத்தி வெளிச்சமான ஒரு இடத்தை புகைப்படம் எடுக்க வேண்டும் உதாரணத்திற்கு: குளியலறை தொட்டி, உங்கள் வீட்டு முன் வாசற்படி, ஒரு கதிரை, அல்லது ஒரு மேசை, இது போன்ற குறிப்பிட்ட ஏதாவது பொருளை புகைப்படம் எடுத்து வைத்திருக்க வேண்டும்.

பின் அலாரம் ஒலிக்கும் ஒவ்வொரு சதர்பத்திலும் குறிப்பிட்ட அந்த இடத்தை புகைப்படம் எடுத்தால் மாத்திரமே அலாரம் நிறுத்தப்படும்.

மேலும் இந்த செயலியில் மேற்குறிப்பிட்ட முறையில் மாத்திரம் அல்லாமல் உங்கள் Android சாதனத்தை 30 தடவை அசைப்பதன் மூலமும் கணித சமன்பாடுகளை தீர்ப்பதன் மூலமும் அலாரத்தை நிறுத்திக்கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளது.

இல்லை இல்லை........ எமக்கு வழமையான முறையே பொருத்தமானது என நீங்கள் கருதினால் இதில் வழமையான முறையில் Dismiss எனும் Button ஐ அழுத்துவதன் மூலம்  இலகுவான முறையில் அலாரத்தை நிறுத்தும் வசதியும் தரப்பட்டுள்ளது.

மிக அற்புதமான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியானது ஒரு முக்கிய தேவைக்காக நீங்கள் கட்டாயம் துயில் எழவேண்டிய சந்தர்பங்களில் கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

மிகவும் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியை நீங்களும் ஒருமுறை தரவிறக்கி பயன்படுத்திப் பார்க்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.


iOS சாதனங்களை பயன்படுத்துபவர்கள் $1.99 எனும் கட்டணத்தை செலுத்தியே இதனை பெற வேண்டும் 




Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top