ஆளுக்கு ஒரு Smart Phone என்றாகிவிட்ட இன்றைய நிலையில் நாமும் அன்றாடம் எத்தனையோ அழைப்புக்களை எமது Smart சாதனம் மூலம் மேற்கொள்கின்றோம். அதற்கும் மேலாக SMS, Intrenet போன்ற வற்றையும் எமது Smart சாதனங்கள் ஊடாக பயன்படுத்துகின்றோம் அல்லவா?


ஆண்ட்ராய்டு  Call, SMS, Data Usage

இவ்வாறு நாம் மேற்கொள்ளக் கூடிய அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், இணையப் பாவனைகள் போன்றவற்றினை புள்ளி விபர அடிப்படையில் அறிந்து கொள்ள உதவுகின்றது Callistics எனும் ஆண்ட்ராய்டு சாதனத்துக்கான செயலி.

நாம் கீழே வழங்கியுள்ள இணைப்பு மூலம் இதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.இந்த செயலியை உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் நிறுவிய பின் நீங்கள் மேற்கொள்ளும் அழைப்புக்கள் உட்பட குறுஞ்செய்திகள், இணையப் பாவனைகள் போன்றவற்றின் தரவுகள் இந்த செயலியால் திரட்டப்படும்.

பின் நீங்கள் குறிப்பிட்ட ஒரு நாளில், வாரத்தில், மாதத்தில் அல்லது ஒரு கால இடைவெளியில் எந்த அளவு இணையத்தை பயன்படுத்தி உள்ளீர்கள் எத்தனை குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளீர்கள் எந்த அளவு இணையத்தை பயன்படுத்தி உள்ளீர்கள் என்பன தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த செயலி மூலம் பின்வருவன தொடர்பான தகவல்களை புள்ளி விபர அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும்.

  • உங்கள் Smart சாதனம் மூலமாக எத்தனை நிமிட மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றுள் எத்தனை நிமிட அழைப்புக்கள் வெளிச்சென்ற அழைப்புக்கள் எத்தனை நிமிட அழைப்புக்கள் உள்வந்த அழைப்புக்கள்.
  • எந்தெந்த இலக்கத்திற்கு அதிகம் அழைப்புக்களை மேற்கொண்டுள்ளீர்கள்.
  • எத்தனை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது 
  • எத்தனை குறுஞ்செய்திகள் உங்களுக்கு வந்துள்ளது.
  • எந்தெந்த இலக்கங்களுக்கு அதிகம் குறுஞ்செய்திகள் அனுப்பி உள்ளீர்கள்.
  • எந்த அளவு இணையத்தை பயன்படுத்தி உள்ளீர்கள், அவற்றுள் Mobile Data மூலம் எந்த அளவு தரவு பயன்படுத்தி உள்ளீர்கள், Wi-fi மூலம் எந்த அளவு தரவை பயன்படுத்தி உள்ளீர்கள் என்பன தெடர்பான அனைத்து தகவல்களையும் வேவேராக அறிந்து கொள்ள முடியும்.


தொடர்புடைய இடுகை:


அழகிய இடைமுகத்துடன் புள்ளி விபரங்களை மிக தெளிவாகவும் விரைவாகவும் புரிந்து கொள்ளும் படி எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top