HI






Audio, Video கோப்புக்களை கணினி மற்றும் Smart சாதனங்களில் இயக்குவதற்கு உதவும் சிறந்த மென்பொருள்களுள் VLC Media Player உம் ஒன்றாகும்.

ஏனைய Media Player களில் இயங்காத ஏராளமான வீடியோ கோப்புக்கள் இந்த மென்பொருளில் இயங்குகின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

Tamil VLC


இதன் புதிய பதிப்பானது பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அதே வேலை இதன் Android சாதனங்களுக்கான பதிப்பில் "வீடியோ கோப்புக்கள் பின்புலத்தில் இயங்கக்கூடிய " வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வசதியை உங்கள் Android சாதனத்திலும் செயற்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.


1. முதலில் பின்வரும் இணைப்பு மூலம் VLC Media Player இன் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்க.

VLC For Android

VLC Home Page (Windows/Mac/iOS)


2. பின் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து Settings பகுதிக்கு செல்க.


      VLC Android செயலி   VLC Tamil

3. அதில் தப்பட்டுள்ள Interface என்பதனை அழுத்தி Enable “Play videos in background.” என்பதில் Tick அடையாளத்தினை இடுக.

Android Tamil aplication

அவ்வளவு தான்......! 

இனி Video கோப்புக்கள் இயங்கும் போது நீங்கள் Home Button ஐ அழுத்தி வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட வீடியோ கோப்பு தொடர்ச்சியாக இயங்கும். பின் அதனை Notification Panel மூலம் தொடரலாம்.



முயற்சித்துதான் பாருங்களேன்.

மேலும் இதனையும் பார்க்க: தமிழ் மொழி ஆதரவுடன் கூடிய Android சாதனத்துக்கான இலவச File Manager மென்பொருள்.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top