ஆரம்பத்தில் போலல்லாது இன்றைய உலகில் அனைத்தும் Digital மயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவால் நாம் நினைக்கக் கூடிய எந்த ஒன்றினையும் ஒரு சில நொடிப் பொழுதுகளில் உலகின் இன்னுமொரு மூலையில் இருக்கக் கூடிய ஒருவருடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

Tamil technology


அந்த வகையில் பௌதீக வடிவில் அமைந்த எந்த ஒரு ஆவணத்தினையும் Digital வடிவத்திற்கு மாற்றி அவற்றினை பகிர்ந்து கொள்ள உதவுகின்றது Office Lens எனும் Smart சாதனங்களுக்கான இலவச செயலி.
Microsoft நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படும் இந்த செயலியை Windows Phone, Android மற்றும் iOS இயங்குதளங்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கக்கூடிய Smart சாதனங்களில் நிறுவி பயன்படுத்தலாம்.


இந்த செயலி மூலம் உங்களிடம் இருக்கக்கூடிய எந்த ஒரு எழுத்துவடிவில் அமைந்த ஆவணத்தையும் தெளிவான Digital வடிவில் அமைந்த ஆவணங்களாக மாற்றிக்கொள்ள முடிவது மாத்திரமின்றி கரும் பலகைகள் மற்றும் வெள்ளை பலகைகளில் எழுதக்கூடிய எழுத்துக்களை கூட தெளிவான Digital வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள முடிகிறது.

Office Lens செயலி


எனவே இது எதிர்காலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களால் தவிர்க்க முடியாத ஒரு செயலியாகக் கூட உருவெடுக்கலாம் என்பதில் ஐயமில்லை.

அத்துடன் இந்த செயலி மூலம் Digital வடிவத்திற்கு மாற்றப்படும் ஆவணங்களை PDF, Word மற்றும் PowerPoint போன்ற முக்கிய ஆவன வடிவங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.

அது மாத்திரமல்லாமல் இந்த செயலியில் உள்ள OCR தொழில்நுட்பம் மூலம் Scan செய்யக்கூடிய ஆவணங்களில் உள்ள எழுத்தனை தனியாக வேறுபிரிக்க முடியும் இதன் மூலம் அவற்றினை மிக இலகுவாக Edit, Copy செய்து கொள்ள முடியும்.

பின்வரும் இணைப்புகள் மூலம் இந்தனை உங்கள் Smart சாதனங்களுக்கு தரவிறக்கிக்கொள்ளலாம்.

நாம் எமது முன்னைய பதிவுகள் மூலம் இதுபோன்றதொரு Genius Scan எனும் செயலியை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நீங்கள் அதனையும் பார்க்க விரும்பினால் கீழுள்ள பதிவை பார்க்க:

எழுத்து மூலமான ஆவணங்களை Digital வடிவில் பெற்றுக்கொள்ள உதவும் Smart சாதனங்கலுக்கான இலவச செயலி (Android/iOS)


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top