சுவாரஷ்யம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எமது கணினியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை ஏனையவர்கள் தவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கு நாம் எமது கணினிக்கு கடவுச்சொல் இட்டு பாதுகாப்போம் அல்லவா?

கணினி கடவுச்சொல்


அவ்வாறு கடவுச்சொல் இட்டு கணினியை பாதுகாப்பது அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொதுவான முறையாக இருந்தாலும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கு இந்த பதிவு சுவாரஷ்யமானதாக அமையும்.


எனவே எமது கணினியில் உள்ள தகவல்களை ஏனையவர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு கடவுச்சொற்களை ஒரு தடுப்புச்சுவராக அமைக்கும் முறை மாத்திரம் அல்லாது அவற்றுக்கு பதிலாக புகைப்படங்களை பயன்படுத்தவும் பிரத்தியோக சாதனத்தினை எமது கணினியுடன் இணைப்பதன் மூலம் எமது கை விரல் அடையாளத்தினை ஒரு தடுப்புச்சுவராக பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.

என்றாலும் Keylemon எனும் மென்பொருளானது எமது முகத்தினை கடவுச்சொல்லாக பயன்படுத்த வழிவகுக்கின்றது. 

இதற்கு உங்கள் கணினியில் Webcam பொருத்தப்பட்டிருத்தல் அவசியமானதாகும்.

Windows மற்றும் Mac கணினிகளில் மிகவும் சிறப்பாக இயங்கக்கூடிய இந்த மென்பொருளை பயன்படுத்துவது மிகவும் இலகுவானது.


கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் இதனை தரவிறக்கி நிறுவிய பின் திறக்கப்படும் Keylemon Wizard மூலம் உங்கள் முகத்தின் பிம்பத்தை உள்ளிட வேண்டும்.அவ்வளவு தான் இனி உங்கள் கணினி துவங்கும் போது திறக்கப்படும் சிறிய சாளரத்தின் ஊடாக உங்கள் முகம் அடையாளப்படுத்தப்பட்டு உடனடியாக உங்கள் கணினிக்குள் உள்நுழைய முடியும்.


பயனரின் முகத்தினை மிக வேகமாக இனங்காண்பது இந்த மென்பொருளின் சிறப்பம்சமாகும்.


மேலும் இந்த மென்பொருளின் இலவச பதிப்பு மூலம் ஒருவருடைய முகத்தினை மாத்திரமே கடவுச்சொல்லாக பயன்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்களை இதில் இணைப்பதற்கும் குரலை கடவுச்சொல்லாக பயன்படுத்துவதற்கும் என மேலதிக வசதிகளை பெற வேண்டும் எனின் இதனை கட்டணம் செலுத்தி பெறல் வேண்டும்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top