HI






நாம் கணினியை பயன்படுத்தும் ஒவ்வொரு தடவையும் புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள், பாடல்கள் என ஏராளமானவற்றை கையாளுகிறோம் அல்லவா?


அது போன்ற சந்தர்பங்களில் குறிப்பிட்ட ஒரு கோப்பு கணினி வன்தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பல இடங்களில் சேமிக்கப்படுவதுண்டு.

இதனால் காலப்போக்கில் கணினி வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு கணினி ஸ்தம்பித்து விடும் சந்தர்பங்களும் ஏற்படலாம்.


எனவே அவ்வாறான குறைபாட்டினை நிவர்த்தி செய்ய உதவுகின்றது Glary Duplicate Cleaner எனும் இலவச மென்பொருள்.

Duplicate Cleaner tamil

  • சிறியோர் முதல் பெரியோர் வரை மிக இலகுவாக பயன்படுத்தும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த மென்பொருளானது எமது வன்தட்டில் தேங்கிக்கிடக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே வகையான கோப்புக்களை மிக வேகமாக கண்டறிகின்றது.
  • மேலும் தேடல் முடிவில் பெறப்படும் கோப்புக்களை அதன் வகையின் அடிப்படையில் வேறுபிரித்துத் தரப்படுவதனால் கணினியில் எந்த வகையான கோப்புக்கள் அதிகமான போலிகளை கொண்டுள்ளன என்பதனை மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.
  • அத்துடன் கணினி வன்தட்டில் ஒன்றுக்கு மேற்ற்பட்ட தடவைகள் போலியாக சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து கோப்புக்களையும் ஒரு தடவை சுட்டுவதன் மூலம் மிக இலகுவாக நீக்கிக் கொள்ள முடியும்.


இவைகள் தவிர சாதாரண ஒரு கணினியிலும் தரவிறக்கி பயன்படுத்தக்கூடிய இந்த மென்பொருளானது வெறும் 4.8 Mb அளவையே கொண்டுள்ளது.

எனவே நீங்களும் இந்த மென்பொருளை தரவிறக்கி பயன்பெற விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.






Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top