Microsoft தரும் OneNote எனும் வசதி மூலம் Smart சாதனங்களின் ஊடாகவும் கணினி மூலமாகவும் நேரடியாக இணையத்தின் ஊடாகவும் எமக்குத் தேவையான குறிப்புக்கள் மற்றும் ஆவணங்களை மிக நேர்த்தியாகவும் இலகுவாகவும் உருவாக்கி நிருவகிக்க முடியும்.


Microsoft தரும் இணையத்தின் ஊடான இலவச OneNote சேவை



நாம் உருவாக்கக் கூடிய ஆவணங்களுக்கு கடவுச்சொல் இட்டு பாதுகாக்க முடிவதுடன் குரல் மற்றும் வீடியோ மூலமாகவும் குறிப்புக்களை பதிந்து நிருவகிக்க முடியும்.


மேலும் உருவாக்கப்பட்ட குறிப்புக்களை குரல் மூலமாக தேடிப்பெறும் வசதியையும் இது கொண்டுள்ளது.

அத்துடன் கணினி மற்றும் ஏனைய Smart சாதனங்கள் ஊடாக இந்த சேவையை பெறுவதற்காக வழங்கப்படும் மென்பொருள்களானது எளிமையான தோற்றத்துடன் அதிக வசதிகளையும் கொண்டுள்ளது.


விடயம் என்னவெனில் இதுவரை வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் இலவசமாக வழங்கப்பட்டு வந்த இந்த சேவையானது அல்லது மாதாந்தம் கட்டணம் செலுத்தி முழுமையான வசதிகளை பெறவேண்டி இருந்த இந்த சேவையானது தற்பொழுது எவ்வித கட்டணங்களும், வரையறைகளும் இன்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

எனவே குறிப்பிட்ட சேவையை கணினி ஊடாக பெறுவதற்கான மென்பொருளை முற்றிலும் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ள முடிவதுடன் நீங்கள் ஒரு சாதனத்தின் மூலம் தயாரிக்கக் கூடிய குறிப்புக்கள் மற்றும் ஆவணங்களை ஏனைய அனைத்து சாதனங்கள் மூலமாக நிருவகிக்கவும் முடியும்.

கீழுள்ள இணைப்புகள் மூலம் நீங்களும் இதனை உங்கள் சாதனங்களுக்கு தரவிக்கிக் கொள்ளலாம்.






   





Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top