HI






கணினிகளுக்கான மிகச்சிறந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களில் Bitdefender வைரஸ் எதிர்ப்பு மென்பொருளும் ஒன்றாகும்.

Bitdefender மென்பொருள்


கணினியில் உள்ள எமது தரவுகளுக்கு வேட்டு வைக்கும் வைரஸ் கோப்புக்களுக்கு எதிராக போராடி அதிலிருந்தும்  பாதுகாக்கக்கூடிய இந்த மென்பொருளானது Bitdefender Anti virus, Bitdefender Internet Security, Bitdefender Total Security என பிரதான மூன்று பதிப்புக்களை கொண்டதாகும்.


இதில் Bitdefender Anti virus ஆனது வழங்கக் கூடிய பாதுகாப்பானது கணினிகளுக்கு போதுமானது என்றாலும் நீங்கள் உங்கள் கணினி மூலம் அதிகம் இணையத்தை பயன்படுத்துபவராகவும் உங்கள் வங்கிக் கடனட்டைகளைக் கொண்டு இணையத்தின் மூலம் பொருட்கள் சேவைகளை கொள்வனவு செய்பராகவும் இருந்தால் உங்களுக்கு சிறந்தது Bitdefender Internet Security, Bitdefender Total Security ஆகும்.

அத்துடன் இதன் முன்னைய பத்திப்புக்களை விட 2015 ஆம் ஆண்டுக்கான புதிய பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் உங்கள் கணினியின் வேகத்துக்கு பாதிப்பு ஏற்படாமல்உங்கள் கணினியை  தொடர்ச்சியாக கண்காணிக்கும் இந்த மென்பொருளானது நீங்கள் உங்கள் கணினியில் வீடியோ கோப்புக்களை பார்க்கும் போதோ அல்லது முக்கியமான வேளைகளில் ஈடுபடும் போதோ Popup Box கள் தோன்றாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள்ளது.


அத்துடன் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள இரு வழி தீச்சுவரானது உங்கள் கணினிக்கு மேலும் பாதுகாப்பு அளிக்கின்றது.

இவைகள் தவிர இன்னும் ஏராளமான பல வசதிகளுடன் உங்கள் கணினிக்கு சிறந்த பாதுகாப்பையும் வழங்கக் கூடிய இந்த மென்பொருளானது கட்டணம் செலுத்தி பெறவேண்டிய ஒரு மென்பொருளாகும்.



இருப்பினும் கீழுள்ள Promotion Page எனும் இணைப்பில் சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் Bitdefender Total Security 2015 மென்பொருளை  6 மாதம் இலவசமாக பயன்படுத்துவதற்கான இலவச Licence Key மற்றும் அதனை தரவிறக்குவதற்கான தரவிரக்கச்சுட்டி போன்றவற்றை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கே பெற்றுக்கொள்ள முடியும்.

(Comment Box இல் உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிட வேண்டாம் அதில் உங்கள் கருத்துக்களை மாத்திரம் தாராளமாக தெரிவிக்கலாம்)

இதனை உங்கள் கணனியில் நிறுவ உங்கள் கணனி ஆகக்குறைந்தது  பின்வரும் தகமைகளையாவது கொண்டிருக்க வேண்டும்.

  • Operating system: Microsoft Windows XP SP3 | Windows Vista SP2 | Windows 7 SP1 | Windows 8 | Windows 8.1;
  • CPU: 1.6 GHz processor;
  • Memory (RAM): 1GB;
  • Available free hard disk space: 1 GB free space (at least 800 MB on the system drive)


Promotion Page (சலுகை முடிவடைந்துவிட்டது)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top