எமது கணினியில் இருக்கக்கூடிய கோப்புக்களில் ஏராளமானவற்றை நாம் மறதியாலோ அல்லது தேவையற்றவை என கருதும் போதோ அவைகளை நீக்கி விடுவோம் அல்லவா?இருப்பினும் அவைகள் மீண்டும் தேவைப்பட்டால் எவ்வித கவலையும் இன்றி "ரீசைக்கிள் பின்" மூலம் திரும்பப்ப் பெற்றுக்கொள்ளலாம்.


இருப்பினும் இந்த வசதி இன்று மிக வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் துறையில் இல்லையென்றே கூற வேண்டும்.

எனவே ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த குறையை நிவர்த்தி செய்ய உதவுகின்றது "டம்ப்ஸ்டர்" எனும் செயலி (Application)  • உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் இருந்து நீங்கள் நீக்கக்கூடிய புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள் என எந்த ஒன்றையும் இந்த செயலி மூலம் மீட்டுக்கொள்ளலாம்.
  • மேலும் நீங்கள் நீக்கக் கூடிய கோப்புக்களில் எவ்வாறான கோப்புக்களை இந்த செயலி சேமிக்க வேண்டும் என்பதனையும் இதில் தெரிவு செய்யும் வசதி தரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு புகைப்படங்களை மட்டும், அல்லது வீடியோ கோப்புக்களை மட்டும், இல்லையெனில் புகைப்படங்களையும் ஆவணங்களையும் ,மட்டும் என தெரிவு செய்யும் வசதி இதில் உண்டு.  • அது மட்டுமல்லாது எமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் இருந்து நாம் நீக்கும் செயலிகளை (Application) கூட மீள நிறுவிக்கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளது. 
  • மேலும் நீங்கள் நீக்கக்கூடிய கோப்புக்கள் எவ்வளவு காலத்துக்குப் பின் (1 வாரம், 1 மாதம், 3 மாதங்கள்) தானாக நீக்கப்பட வேண்டும் என்பதனையும் தெரிவு செய்து கொள்ளும் வசதி இதில் தரப்பட்டுள்ளது.

எனவே தவறுதலாக அழித்து விட்டோமே மீட்க முடியாதே என்ற கவலை இனிமேல் வேண்டாம். நீங்களும் ஆண்ட்ராய்டு பாவனையாளர் எனின் இன்றே தரவிறக்கி நிறுவிக் கொள்ளலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top