வருடத்தின் விசேட தினங்களில் WonderFox ஆனது அதன் பெறுமதிமிக்க மென்பொருள்களை இலவசமாக வழங்குவதுண்டு. அந்த வகையில் அவ்வாறு வழங்கப்படும் பல மென்பொருள்களை நாம் ஏற்கனவே எமது பக்கத்தில் அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போல் எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு WonderFox DVD Video Converter மற்றும் Video to Picture + Greeting Card Builder ஆகிய மென்பொருள்களை Tamilinfotech உடன் இணைந்து வழங்க WonderFox முன்வந்துள்ளது.Wonderfox இலவச மென்பொருள்


 WonderFox DVD Video Converter

  • ஏறத்தாள 6500 இலங்கை ரூபா பெறுமதியான WonderFox DVD Video Converter மென்பொருள் மூலம் ஒரு வீடியோ கோப்பினை அதன் தரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாதவாறு 50X வேகத்தில் மிக வேகமாக இன்னுமொரு வீடியோ கோப்பின் வடிவத்திற்கு மாற்றி அமைத்துக்கொள்ள முடிவதுடன் DVD இறுவட்டுக்களில் உள்ள வீடியோ கோப்புக்களை HD AVI, HD MP4, HD MOV, FLV, HD WMV, AVI, MP4, VOB, MKV, WMV, MPEG போன்ற பிரதான வடிவங்கள் உட்பட மேலும் 100 க்கும் மேற்பட்ட வெவ்வேறு வீடியோவடிவங்களுக்கும் சாதனங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
  • அத்துடன் YouTube, Facebook, Vimeo, Liveleak, Metacafe போன்ற இன்னும் பல தளங்களில் உள்ள வீடியோ கோப்புக்களை இந்த மென்பொருளின் மூலமே தரவிறக்கிக் கொள்ளவும், வீடியோ கோப்புக்களுக்கு நீங்கள் விரும்பும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும்.

அதாவது குறிப்பிட்ட ஒரு வீடியோ கோப்பில் உள்ள தேவையற்ற பகுதியினை இந்த மென்பொருள் மூலமே அகற்றிக்கொள்ளவும் வெவ்வேறு வீடியோ கோப்புக்களை ஒன்றாக இணைத்துக்கொள்ளவும் Mosaic, Blur, Sharpen, Emboss, Noise, Old Film போன்ற விசேட விளைவுகளை உங்கள் வீடியோ கோப்புக்களுக்கு வழங்கவும் முடியும்.


Video to Picture + Greeting Card Builder


அதே போல் Tamilinfotech உடன் WonderFox இணைந்து வழங்கும் மற்றைய மென்பொருள் Greeting Card Builder ஆகும்.

  • கிட்டத்தட்ட 3500 இலங்கை ருபாய் பெறுமதியான இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பிடித்த வீடியோ கோப்புக்களில் உள்ள அழகிய காட்சிகளை மாத்திரம் புகைப்படங்களாக பெற்றுக்கொள்ள முடிவதுடன் அவற்றினை கொண்டு அழகிய வாழ்த்து மடல்களை தயாரிக்கவும் முடியும்.


எனவே WonderFox வழங்கும் இந்த பெறுமதிமிக்க இரு மென்பொருள்களையும் நீங்களும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கிக் கொள்ள கீழுள்ள இணைப்பினை சுட்டுக.

Wonderfox Valentine’s Day Promotion Page


உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துகொள்ள மறவாதீர்கள்.

Love to hear what you think!

1 comments:

 
Top