Genius Scan எனும் Smart சாதனங்களுக்கான செயலியானது பௌதீக வடிவில் இருக்கக்கூடிய ஆவணங்களை Scan செய்வதன் மூலம் அவற்றினை Digital வடிவில் பெற்றுக்கொள்ள உதவுகின்றது.




உங்களிடம் இருக்கக்கூடிய சான்றிதல்கள், உங்களது சுய விபரக் கோவைகள் அல்லது ஏனைய எழுத்து மூலம் அமைந்த ஆவணங்கள் என எந்த ஒன்றினையும் பிரதி எடுத்து உங்கள் Smart சாதனங்களில் சேமிக்க வேண்டிய தேவை இருந்தாலோ அல்லது அவற்றினை இன்னுமொருவருக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டிய தேவை இருந்தாலோ Genius Scan எனும் இந்த செயலி  உங்களுக்கு பெரிதும் துணையாக அமையும்.




  • இந்த செயலி மூலம் நீங்கள் Scan செய்யக்கூடிய ஆவணங்கள் மிகவும் தெளிவாக அமைவதுடன் அவற்றினை மிக நேர்த்தியாக பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட செயலியில் நெகிழக்கூடிய நேர்கோடுகள் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட ஆவணத்தின் தேவையான பகுதியை மாத்திரம் தெரிவு செய்யவும் தேவையற்ற பகுதிகளை நீக்கிக்கொள்ளவும் முடிகிறது.



  • அத்துடன் நீங்கள் Scan செய்யக்கூடிய ஆவணங்களை இந்த செயலியின் ஊடாக JPEG எனும் புகைப்பட வடிவிலும் PDF எனும் ஆவண வடிவிலும் பெற்றுக்கொள்ள முடியும்.



  • மேலும் நீங்கள் Scan செய்யக்கூடிய ஆவணங்களை அதே வர்ணத்திலோ அல்லது கருப்பு வெள்ளை நிறங்களுக்கோ மாற்றி பெற்றுக்கொள்ளவும் முடியும்.


என்றாலும் இதன் இலவச பதிப்பு மூலம் நாம் Scan செய்து தயாரிக்கும் ஆவணங்களை Gmail மூலமாக மின்னஞ்சல் செய்யவும் குறிப்பிட்ட சாதனத்தில் சேமித்துக் கொள்ளவும் மாத்திரமே முடியும். Whatsapp, Viber, Dropbox போன்ற ஏனைய மூன்றாம் நபர் செயலிகள்  மூலம் பகிர்வதெனின் குறிப்பிட்ட செயலியை கட்டணம் செலுத்தி பெற வேண்டும். எனினும் அவற்றினை Whatsapp, Viber, Dropbox போன்ற ஏனைய மூன்றாம் நபர் செயலிகள் மூலம் பகிர வேண்டும் எனின் எமது சாதனத்தில் அவற்றினை சேமித்த பின் பகிர்ந்துகொள்ள முடியும்.

கீழுள்ள சாளரத்தின் மூலம் நீங்களும் இதனை இலவசமாக தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.

Android



iOS

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top