HI






Windows இயங்குதளம் நிறுவப்பட்ட கணினியை பயன்படுத்துபவர்களுக்கு Windows கணினியில் தரப்பட்டுள்ள Task Bar ஆனது மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

Pin My computer to task bar


இதில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஆவணங்கள் அல்லது மென்பொருள்களை Pin செய்து பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. இவ்வாறு பின் செய்வதன் மூலம் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களை மிக விரைவாகவும் எளிதாகவும் திறந்து கொள்ள முடியும்.


இருப்பினும் நாம் எப்பொழுதும் திறக்கக் கூடிய My Computer இணை Task Bar இல் இணைக்க முடியாதல்லவா? அவ்வாறு இணைத்தாலும் அது Windows Explorer இன் ஒரு பகுதியாகவே அமையும்.


அதே போல் My Computer இல் தோன்றும் எமது கணினியின் வன்தட்டின் ஒரு பாகத்தினையும் Task Bar இல் Pin செய்ய முடிவதில்லை இருப்பினும் எமது முன்னைய பதிவுகள் மூலம் வன்தட்டின் ஒரு பாகத்தினை எவ்வாறு Task Bar இல் Pin செய்வது? என பார்த்திருந்தோம்.


மேலும் இதனையும் பார்க்க: Control Panel இல் இருக்கக் கூடிய அம்சங்களை My Computer இல் இணைத்திட உதவும் இலவச மென்பொருள்.

இந்த பதிவின் மூலம் My Computer ஐ எவ்வாறு Task Bar இல் Pin செய்யலாம் என பாப்போம்.


இதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.


  • Desktop இல் Right Click செய்து New ====> Shortcut என்பதனை தெரிவு செய்க.

குறுக்கு வழி


  • பின் தோன்றும் சாளரத்தில் பின்வரும் வரிகளை Past செய்து Next அலுத்துக.

விண்டோஸ் சாளரம்

%SystemRoot%\explorer.exe /E,::{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}

மேலுள்ள வரிகளை Copy செய்துகொள்ள இங்கே சுட்டுக.


  • இனி தோன்றும் சாளரத்தில் Type a name for this shortcut என்பதில் My Computer என தட்டச்சு செய்து Finish என்பதனை அலுத்துக.

குறுக்கு வழி பெயர் சாளரம்


  • பின்னர் உருவாக்கப்பட்ட அந்த Shortcut  ஐ Right Click செய்து Properties ====> Shortcut ====> Change Icon என்பதனை சுட்டுவதன் மூலம் My Computer இற்கு பொருத்தமான ஒரு Icon ஐ தெரிவு செய்து Apply ===> Ok அலுத்துக.



  • இனி குறிப்பிட்ட Shortcut ஐ Drag செய்து Task Bar இல் Drop செய்க.


icon மாற்றும் சாளரம்



அவ்வளவுதான்.

Pin task bar my computer

\இனி Pin செய்யப்பட்ட அதனை சுட்டுவதன் மூலம் நேரடியாக My Computer ஐ திறந்து கொள்ளலாம்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top