ஆரம்பத்தில் போலல்லாது இன்று எந்த ஒரு கணினி மொழி தொடர்பான அறிவும் இன்றி எவர் ஒருவரினாலும் மிக இலகுவாக இணைய தளங்களை உருவாக்கி தமது அவற்றினை நிர்வகிக்க முடிகின்றது.

மொழிபெயர்ப்பு


கணினி மொழி என்றால் என்னவென்றே தெரியாதவர்களால் கூட மிக இலகுவாக இணையதளங்களை உருவாக்கிக் கொள்வதற்கு என தோற்றம் பெற்ற Blogger, WordPress, Joomla போன்ற தளங்களின் வருகைக்குப் பின் இணையதளங்களின் எண்ணிக்கையானது பல மடங்காக அதிகரித்துள்ளது.ஆரம்பத்தில் இணையத்தின் ஊடாக தகவல்களை தேடிப்பெருவதற்கு ஆங்கில மொழி அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் இன்று தமிழ் மொழி உட்பட அவரவருக்கு தெரிந்த எந்த மொழியிலும் எந்த ஒரு தகவலையும் பெற்றுக்கொள்ள முடிகின்றது.


இருப்பினும் உங்களுக்குத் தேவையான தகவல்கள் தமிழ் மொழி அல்லாத வேறு மொழியில் அமைந்திருந்தாலோ அல்லது உங்களால் பொருள் அறிய முடியாத தமிழ் அல்லாத வேறு மொழிகளில் அமைந்திருக்கக்கூடிய சொற்களையோ வசனங்களையோ Google Translate மூலம் மிக இலகுவாக மொழி பெயர்த்துக்கொள்ள முடியும்.


எனினும் இதற்கு Google Translate தளத்துக்கு சென்று உங்களால் பொருள் அறிய முடியாத சொற்களை அதில் தட்டச்சு செய்த பின்னரே அவற்றின் பொருளினை உங்களுக்கு தெரிந்த மொழியில் அறிந்து கொள்ள முடியும்.

என்றாலும் Multi Search எனும் நீட்சியை உங்கள் இணைய உலாவியில் நிறுவிய பின் அதில் பின்வரும் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் உங்களால் பொருள் அறிய முடியாத ஒரு சொல்லினை அல்லது வசனத்தினை Right Click செய்வதன் மூலமாக மிக இலகுவாக மொழிபெயர்த்து பொருள் அறிந்து கொள்ள முடியும்.எனவே பொருள் தெரியாத ஒரு சொல்லினை  Right Click செய்வதன் மூலமாக பொருள் அறிந்து கொள்ளும் வசதியினை நீங்களும் உங்கள் Google Chrome இணைய உலாவியில் செயற்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.


  • கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி  Multi Search எனும் நீட்சியை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக்கொள்க.

  • பின் Google Chrome இணைய உலாவியின் Address Bar இல் chrome://extensions/ என தட்டச்சு செய்து Enter அலுத்துக. அல்லது Google Chrome இணைய உலாவியின் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள Customize and Control Button ஐ சுட்டுவதன் மூலம் More Tools ====> Extension என்பதனை சுட்டுக.
Google Chrome address bar  • இனி அதில் உங்கள் இணைய உலாவியில் நிறுவப்பட்டிருக்கும் நீட்சிகள் பட்டியல் படுத்தப்படும்


  • அதில் நீங்கள் நிறுவிய Multi Search Extension இற்கு கீழ் தரப்பட்டிருக்கும் Option என்பதனை சுட்டுக.
 Multi Search Extension chrome

  • பின் தோன்றும் புதிய சாளரத்தில் Search Engines எனும் Tab ஐ சுட்டுக.


  • இனி அதன் இடது கீழ் மூலையில் Add Search Engine என்பது தரப்பட்டிருக்கும் பின் அதனை சுட்டுக.

Add Search Engine on chrome


  • பின்னர் தோன்றும் புதிய சாளரத்தில் Caption என்பதில் Translate Tamil என தட்டச்சு செய்க. மேலும் Search Query என தரப்பட்டிருக்கும் கட்டத்தில் பின்வரும் வரிகளை Copy செய்து Past செய்க.


 http://translate.google.com/?source=osdd#auto|ta|{searchTerms}

இதனை Copy செய்ய இங்கே சுட்டுக.

 Multi Search Options google translate
  • பின் அந்த சாளரத்தினை மூடிய பின் Multi Search Options எனும் பிரதான சாளரத்தின் வலது கீழ் மூலையில் உள்ள Save Changes என்பதனை சுட்டி வெளியேறுக.அவ்வளவு தான்.

இனி இணையத்தில் இருக்கும் தமிழ் அல்லாத மொழிகளை Right Click செய்வதன் மூலம் மிக இலகுவாக தமிழ் மொழிக்கு மாற்றி பொருள் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் இதனையும் பார்க்க: எந்த ஒரு மொழியினையும் Right Click செய்வதன் ஊடாக Google Translate மூலம் நேரடியாக தமிழில் மொழி பெயர்த்துக் கொள்வது எப்படி? (Google Chrome, Firefox)


தொழில்நுட்ப உலகில் நிகழும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய தொடர்ந்தும் இணைந்திருங்கள் எமது தகவல் தொழில்நுட்ப முகநூல் பக்கத்துடன்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top