HI






குறிப்பிட்ட ஒரு வடிவத்தில் உள்ள கோப்புக்களை இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள உதவுகின்றது Docspal எனும் இணையதளம்.


free online file converter and viewer


உங்கள் கணினியில் இருக்கக்கூடிய  அல்லது இணையத்தில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஆவணங்கள், வீடியோ கோப்புக்கள், மின் புத்தகங்கள், சுருக்கப்பட்ட கோப்புக்கள் (ARCHIVES) என எந்த ஒன்றினையும் இந்த தளத்துக்கு தரவேற்றுவதன் மூலம் அவற்றினைஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளவும் அவற்றினை இந்த தளத்தின் ஊடாகவே திறந்து பார்த்துக்கொள்ளவும் முடியும்.




இந்த தளத்தின் மூலம் குறிப்பிட்ட ஒரு வடிவில் இருக்கும் ஆவணத்தை பின்வரும் வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


  • .csv .doc .docx .djvu .odp .ods .odt .pps .ppsx .ppt .pptx .pdf .ps .eps .rtf .txt .wks .wps .xls .xlsx .xps
  • உதாரணத்திற்கு PDF வடிவில் இருக்கும் ஒரு ஆவணத்தினை Microsoft Word (.doc .docx) போன்ற வடிவங்களுக்கு அல்லது ஏனைய ஆவண வடிவங்களுக்கோ மாற்றிக்கொள்ள முடியும்.



குறிப்பிட்ட ஒரு வடிவில் இருக்கும் வீடியோ கோப்பினை பின்வரும் வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


  • .3gp .avi .flv .m4v .mkv .mov .mp4 .mpeg .ogv .wmv .webm


மேலும் இதனையும் பார்க்கVideo கோப்புக்களை 200 க்கும் மேற்பட்ட வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள உதவும் கட்டண மென்பொருளுக்கு ஈடான ஒரு இலவச மென்பொருள்.


குறிப்பிட்ட ஒரு வடிவில் இருக்கும் இசையை, பாடலை அல்லது வேறு ஒலி வடிவில் அமைந்த கோப்புக்களை (Audio) பின்வரும் வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


  • .aac .ac3 .aiff .amr .ape .au .flac .m4a .mka .mp3 .mpc .ogg .ra .wav .wma 



குறிப்பிட்ட ஒரு வடிவில் அமைந்திருக்கும் மின்புத்தகத்தினை பின்வரும் வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


  • .chm .epub .fb2 .lit .lrf .mobi .pdb .rb .tcr



குறிப்பிட்ட ஒரு வடிவில் அமைந்திருக்கும் புகைப்படத்தினை பின்வரும் வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


  • .bmp .exr .gif .ico .jp2 .jpeg .pbm .pcx .pgm .png .ppm .psd .tiff .tga



குறிப்பிட்ட ஒரு வடிவில் அமைந்திருக்கும் சுருக்கப்பட்ட கோப்பு (ARCHIVES) ஒன்றினை பின்வரும் வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.


  • .7z .zip .rar .jar .tar .tar .gz .cab



அத்துடன் Microsoft word, Powerpoint, pdf, Open office documents போன்ற வடிவில் அமைந்த ஆவணங்களையும் djvu, ps, jpeg 2000, png, psd, tiff போன்ற வடிவில் அமைந்த புகைப்படங்களையும் இந்த தளம் மூலம் திறந்து பார்க்கவும் முடியும்.



நீங்களும் இந்த தளத்துக்கு செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பினை சுட்டுக.



மேலும் இவற்றினையும் பார்க்க: 

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top