நீங்கள் உங்களுக்கு என்றே ஒரு தனித்த கணினியை பயன்படுத்துபவரா? சில சந்தர்பங்களில் அதனை ஏனையவர்கள் பயன்படுத்தி இருப்பார்களோ என எண்ணத் தோன்றுகிறதா? 

TurnedOnTimesView tamil

கவலையை விடுங்கள் உங்கள் கணினி துவக்கப்பட்ட (Turn On) நேரத்தையும் அதன் இயக்கம் நிறுத்தப்பட்ட (Turn Off) நேரத்தையும் அறிந்து கொள்ள உதவுகின்றது TurnedOnTimesView எனும் இலவச மென்பொருள்.மிகவும் சிறிய அளவையே கொண்டுள்ள (67 KB) இந்த மென்பொருளை தரவிறக்கிய பின் கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை மாறாக Double Click செய்வதன் மூலம் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • பின் உங்கள் கணினியில் உள்ள இயங்குதளம் நிறுவப்பட்ட நாள் தொடக்கம் தற்போதுள்ள நேரம் வரை உங்கள் கணினி எந்தெந்த நேரங்களில் துவக்கப்பட்டது மற்றும் எந்தெந்த நேரங்களில் நிறுத்தப்பட்டது என்பதனை அறிந்து கொள்ள முடியும்.
  • அது மட்டுமல்லாது உங்கள் கணினி எவ்வளவு நேரம் இயங்கியது? அதன் இயக்கம் நிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்ன? அது Restart செய்யப்பட்டதா? அல்லது Shutdown செய்யப்பட்டதா? போன்ற தகவல்கள் உட்பட இன்னும் சில தகவல்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.
  • இவைகள் தவிர குறிப்பிட்ட மென்பொருளில் தோன்றும் சிவப்பு மற்றும் பச்சை நிற குறியீடுகள் மூலம் குறிப்பிட்ட கணினியின் இயக்க நிறுத்தம் சரியான முறையில் அமைந்திருந்ததா? அல்லது சடுதியாக நிறுத்தப்பட்டதா? என்பதனையும் அறிந்துகொள்ள முடியும்.

சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியுமான இந்த மென்பொருளை நீங்களும் உங்கள் கணினிக்கு தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download TurnedOnTimesView


மேலும் இதனையும் பார்க்க: உங்கள் கணனியில் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயற்பாடுகளையும் அறிந்து கொள்ள உதவும் மென்பொருள்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top