Windows இன் அடுத்த பதிப்பு Windows 9 என்றே அழைக்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கப் பட்டிருந்தாலும் Windows இன் அடுத்த பதிப்பு Windows 10 என Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள் பின்வருமாறு 

1. புதிய வசதியுடன் கூடிய Start Menu இணைக்கப்பட்டுள்ளது.


windows 10 tamil


  • Windows 8 இல் நீக்கப்பட்ட Start Menu ஆனது Windows 10 புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதுடன் இந்த புதிய Start menu இல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய Windows Store Apps மற்றும் நீங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இணையதளங்கள் போன்றவைகளை இணைத்துக்கொள்ளவும் முடியும். (Live Tile தோற்றத்தில்)


2. Windows Store apps மென்பொருள்களை Desktop இல் இருந்தவாறே பயன்படுத்திக்கொள்ள முடியும்.


windows 10 tamil review


  • Windows Store இல் இருந்து தரவிறக்கக்கூடிய Windows Store apps மென்பொருள்களை Desktop இல் இருந்தவாறு பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அவற்றின் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடிவதுடன் அவற்றினை Minimize, Maximize, Close செய்துகொள்ளவும் முடியும்.


3. Multiple Desktops வசதி 


Multiple Desktops in windows 10 tamil


  • Multiple Desktops வசதி மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட Desktops திரைகளை உருவாக்கி அவற்றினை தனித்தனியே நிருவகிக்க முடியும் 

4. கோப்புக்களையும், கோப்புறைகளையும் வேகமாக பெற்றுக்கொள்ளும் வசதி.


  • நீங்கள் அண்மையில் பயன்படுத்திய கோப்புக்களையும் அடிக்கடி பயன்படுத்தும் கோப்புறைகளையும் Windows 10 இன் File Explorer காட்சிப்படுத்துகின்றது. இதன் மூலம் உங்களுக்குத் தேவையான கோப்புக்களையும் கோப்புறைகளையும் மிகவிரைவில் பெற்றுக்கொள்ள முடியும்.

5. புதிய Task view button தரப்பட்டுள்ளது 


Task view button in windows 10


  • வெவ்வேறுபட்ட  Desktop திரைகளில் திறக்கப்பட்டுள்ள கோப்புக்களையும் கோப்புறைகளையும் இந்த புதிய Task view button மூலம் மிக இலகுவாகவும் விரைவாகவும் திறந்துகொள்ள முடியும்.

குறிப்பு: Windows Store மூலம் தரவிறக்கப்படும் மென்பொருள்களுக்கு Microsoft இட்டுள்ள புதிய பெயர் Universal Windows Apps என்பதாகும் இதற்கு முன் இது Metro Apps  என அழைக்கப்பட்டது.

இவைகள் தவிர இன்னும் பல புதிய வசதிகள் இதில் தரப்பட்டுள்ளது. இதன் முழுமையான பதிப்பினை 2015 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிட Microsoft எதிர்பார்துள்ளதுடன் பின்வரும் இணைப்புகள் மூலம் Technical Preview பதிப்பை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.

Download Windows 10 (32-Bit) [2.9 GB]

Download Windows (64-Bit) [3.8 GB]


இதனை நிறுவும் போது பின்வரும் Licence Code ஐ உள்ளிடுக.

NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR

மேலுள்ள இணைப்பு மூலம் நீங்கள் தரவிறக்கிய பின் DVD இறுவட்டு ஒன்றுக்கு இதனை Write செய்து உங்கள் கணனிக்கு நிறுவிக்கொள்ளலாம் அல்லது DVD இறுவட்டுக்கு பதிலாக உங்கள் USB சாதனத்தையும் பயன்படுத்தலாம்.

DVD இறுவட்டுக்கு பதிலாக USB சாதனத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிய இங்கே சுட்டுக.


Windows 10 இயங்குதளத்தினை உங்கள் கணனியில் நிறுவுவதற்கு உங்கள் கணனி குறைந்தது பின்வரும் அடிப்படை அம்சங்களை கொண்டிருத்தல் வேண்டும்.

  • Processor: 1 GHz or faster with support for PAE, NX, and SSE2
  • RAM: 1 GB (32-bit) or 2 GB (64-bit)
  • Hard disk space: 16 GB (32-bit) or 20 GB (64-bit)
  • Graphics card: Microsoft DirectX 9 graphics device with WDDM driver.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top