HI






இன்றைய இணையமானது வெறுமனே இணையதளங்களை பார்பதற்கும் தகவல்களை பெறுவதற்கும் மட்டுமின்றி இணையத்தின் ஊடாக எமது புகைப்படங்களை மெருகேற்றிக் கொள்வதற்கும், ஆவணங்களை தயாரிப்பதற்கும் என பல்வேறு செயற்பாடுகளை நிறைவேற்றிக்கொள்ள துணை புரிகின்றது.

pdf tamil

அந்தவகையில் Smallpdf எனும் தளமானது எமது PDF ஆவணங்களை நிருவகிப்பதற்கு என சிறந்த வசதிகளை தருகின்றது.

உங்கள் கணினியில் உள்ள அல்லது Dropbox, Google Drive போன்ற இணைய சேமிப்பகங்களில் இருக்கக்கூடிய PDF ஆவணங்களை இந்த தளத்துக்கு தரவேற்றுவதன் மூலம் அவற்றினை பின்வரும் வகையில் நிருவகிக்கலாம்.


  • இந்த தளத்தில் தராப்பட்டுள்ள Compress PDF என்பதன் மூலம் அளவில் அதிகமான PDF கோப்புக்களின் அளவினை சுருக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் குறிப்பிட்ட PDF கோப்பினை ஏனையவர்களுடன் இலகுவாக பகிர்ந்து கொள்ள முடிவதுடன் கணினியில் உள்ள வன்தட்டின் அளவை மீதப்படுத்திக்கொள்ளவும் முடியும்.
  • JPG வடிவில் அமைந்த புகைப்படங்களை PDF வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளவும்  PDF வடிவில் அமைந்த ஆவணங்களை JPG எனும் புகைப்பட வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.
  • இரு வேறு PDF ஆவணங்களை ஒன்றாக இணைத்துக் கொள்ளவும் பல பக்கங்களை கொண்டுள்ள ஒரு PDF ஆவணத்தை வெவ்வேறாக பிரித்துக்கொள்ளவும் முடியும்.
  • மேலும் Word, Excel, Power Point போன்ற வடிவங்களில் அமைந்த ஆவணங்களை PDF ஆவண வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.
  • இவைகள் தவிர கடவுச்சொல் இட்டு பாதுகாக்கப்பட்ட ஒரு PDF ஆவணத்தின் கடவுச்சொல்லினை நீக்கிக்கொள்ளவும் முடிகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


கணினியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியுமான வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளத்துக்கு நீங்களும் செல்ல விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

 Smallpdf




Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top