கணினி முன் நாம் அமர்ந்து சில செயற்பாடுகளை மேற்கொள்கையில் அல்லது கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுகையில் கடிகார முட்கள் நகருவதனையே நாம் உணருவதில்லை.

 Dexclock


இதனால் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய ஏனைய செயற்பாடுகளை செய்ய மறந்து விடும் சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு.

எனவே கடிகாரத்தின் முட்கள் நகருவதனை உங்களுக்கு உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது Dexclock எனும் இலவச மென்பொருள்.


இந்த மென்பொருளானது உங்கள் கணினியின் திரைக்கு நீங்கள் பின்புல படமாக பயன்படுத்தும் புகைப்படத்தில் நேரம், மற்றும் திகதியினையும் இணைத்துவிடுகின்றது.


இதனால் நீங்கள் கணினியின் திரையை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் இந்த மென்பொருள் மூலம் பெரிய எழுத்துக்களில் காட்டப்படும் நேரத்தினை தானாகவே அறிந்து கொள்வீர்கள்.

கணினி பின்புலப் படங்கள் மென்பொருள்


கணினியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது உங்கள் கணினிக்கு அழகிய நான்கு பின்புலப்படங்களை தன்னகமாக கொண்டுள்ளது.

இருப்பினும் இந்த மென்பொருளுக்கு என்றே விசேடமாக வடிவமைக்கப்பட்ட பின்புலப்படங்களை மாத்திரமே உங்கள் கணினியின் திரைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கென இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள நான்கு படங்களை விட மேலதிகமானவைகளை நீங்கள் பெற விரும்பினால் அவற்றினை அந்த மென்பொருளுக்கான இணைய தளத்தில் இருந்து இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும். 


நீங்களும் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

Download Dexclock (5.35 MB)


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top