HI






உங்கள் கணனியில் அல்லது ஆண்ட்ராய்டு சாதனத்தில் தேங்கிக்கிடக்கும் தேவையற்ற கோப்புக்களை ஒரு சில நிமிடங்களிலேயே கண்டறிந்து அவற்றினை நீக்கிக் கொள்ள உதவுகின்றது   க்ளீன் மாஸ்டர் (Clean Master) எனும் மென்பொருள்.

கணனி வேகமாக இயங்க clean master


இந்த மென்பொருளானது கணனியை பராமரிக்கும் ஏனைய மென்பொருள்களை விட மிக வேகமாக செயற்படுவதுடன் ஏனைய மென்பொருள்களை விட அதிக அளவிலான தேவையற்ற கோப்புக்களை கண்டறிந்து நீக்குகின்றது.


இதன் மூலம் உங்கள் கணனியின் வன்தட்டினை பெருமளவில் சேமித்துக்கொள்ள முடிவதுடன் கணனியை வேகமாக இயங்கச்செய்யவும் முடியும்.


இது உங்கள் இயங்குதளத்தில் தேங்கும் தேவையற்ற கோப்புக்களை மாத்திரம் இன்றி இணைய உலாவிகளால் சேமிக்கப்படும் தற்காலிக கோப்புக்கள், உங்கள் கணனியில் நிறுவி இருக்கும் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மென்பொருள்கள் மூலம் உருவாக்கப்படும் தேவையற்ற கோப்புக்கள், Registry இல் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகள், Media Player கள் மூலம் உருவாக்கப்படும் கோப்புக்கள் என அத்தனையையும் ஒருசில நிமிடங்களிலேயே கண்டறிந்து நீக்குகின்றது.

மேலும் சில மென்பொருள்களால் சேமிக்கப்படும் கோப்புக்களை நீங்கள் நீக்க விரும்பாவிட்டால் அவற்றினை தவிர்த்துக்கொள்ளும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

உங்கள் கணனியை வேகமாக இயங்கச்செய்யும் Ccleaner, Glary Utilities, Advanced System Care, Privacy Eraser போன்ற மென்பொருள்களையும் எமது முன்னைய பதிவுகள் மூலம் நாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருந்தோம்.

Android சாதனங்களை பயன்படுத்தும் பயனர்கள் மத்தியில்  க்ளீன் மாஸ்டர்  Clean Master பெரும் வரவேற்பை பெற்றிருந்ததுடன் தற்பொழுது கணனிக்கான பதிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அழகிய தோற்றத்தையும் எளிமையான இடைமுகத்தையும் கொண்டுள்ள இந்த மென்பொருளை கணனியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அத்துடன் இதன் Android சாதனத்துக்கான பதிப்பிலும் பல பயனுள்ள வசதிகள் தரப்பட்டுள்ளது.  இதன் Android சாதனத்துக்காக தரப்பட்டுள்ள மென்பொருளில் உள்ள APP MANAGER எனும் வசதி மூலம்  உங்கள் Android சாதனத்தில் உள்ள தேவையற்ற மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் தெரிவு செய்து நீக்கிக்கொள்ள முடிவதுடன் உங்கள் Android சாதனத்தை வேகமாக இயங்கச்செய்ய CPU BOOST, MEMORY BOOST எனும் வசதிகள் உட்பட இன்னும் பல வசதிகள் தரப்பட்டுள்ளது.


XP, Windows Vista, Windows 7, Windows 8 மற்றும் Windows 8.1 ஆகிய இயங்குதளங்களில் சிறப்பாக இயங்கக்கூடிய இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


மேலும் இதனை பின்வரும் சாளரத்தின் மூலம் உங்கள்  Android சாதனத்துக்கும் தரவிறக்கிக் கொள்ள முடியும்.


உங்கள் Android சாதனத்தை வேகமாக இயங்கச்செய்யவும் உங்கள் Android சாதனம் தொலைந்து விடும் சந்தர்பத்தில் அதனை மீள பெற்றுக்கொள்வதற்கும் என பல்வேறு வசதிகளை Mobile Care எனும் தருகின்றது. அத்துடன் Battery Doctor எனும் மென்பொருளை உங்கள் Android சாதனத்தில் நிறுவுவதன் மூலம் உங்கள் Android சாதனத்தில் இருந்து வீணே விரயமாகும் சக்தியை சேமித்துக்கொள்ளவும் முடியும்.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top