எமது கணினியிலும், Smart சாதனங்களிலும் ஆவணங்கள், புகைபடங்கள், வீடியோ கோப்புக்கள், பாடல்கள் என ஏராளமானவற்றை சேமித்து வைத்திருப்போம் அல்லவா?

search everything tamil


அவ்வாறு சேமித்து வைத்திருப்பவைகளில் குறிப்பிட்ட ஒரு கோப்பினை உடனடியாக பெற வேண்டி இருப்பின் கணினியில் உள்ள File Explore மூலமாக அல்லது Smart சாதனங்களில் உள்ள File Manage மூலமாக பெற்றுக்கொள்வோம்.

என்றாலும் அவைகள் சேமிக்கப்பட்ட இடம் எமக்கு ஞாபகம் இல்லையெனில் அவைற்றினை தேடிப்பெறுவது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாக அமைந்துவிடும். 


search everything android in tamileverything android tamilஇது போன்ற சந்தர்பங்களில் குறிப்பிட்ட கோப்பு ஒன்றை மிக வேகமாக தேடிப்பெற ஏராளமான மென்பொருள்கள் உதவுகின்றது. அந்த வகையில் Everything எனும் Windows இயங்குதளங்களுக்கான மென்பொருளை  எமது முன்னைய பதிவுகள் மூலம் நாம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்தோம்.

அதே போன்ற வசதியினை Android சாதனங்களுக்கும் தருகிறது Search Everything எனும் இலவச செயலி 

இந்த செயலியானது உங்கள் Android சாதனத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு வடிவில் அமைந்த கோப்புக்களையும் கண்ணிமைக்கும் நேரத்தினுள் தேடிப்பெற்றுக்கொள்ள உதவுகிறது.


இதனை தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் நிறுவியதன் பின் குறிப்பிட்ட சாதனத்தில் உள்ள அனைத்து கோப்புக்களையும் இது தானாகவே Scan செய்துகொள்ளும் பின் உங்களுக்குத்தேவையான கோப்பின் பெயரை இதில் தட்டச்சு செய்யும்போது அந்த பெயரில் அமைந்த அத்தனை கோப்புக்களையும் உடனடியாக தேடிப்பெற்றுத் தரும். (இது ஆரம்பத்தில் Scan செய்வதற்கு மாத்திரம் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும்.)


மேலும் அவ்வாறு தேடல் முடிவில் பெறப்படக்கூடிய கோப்புக்களை Search Everything எனும் இந்த செயலியில் இருந்தவாரே நீங்கள் விரும்பும் செயலிகளை பயன்படுத்தி திறந்து கொள்ளவும், அவற்றை உங்கள் Android சாதனத்தில் இருந்து நீக்கிக் கொள்ளவும், அவற்றினை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், குறிப்பிட்ட கோப்பு தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் முடிகிறது.

மேலும் தேடல் முடிவில் பெறப்படக்கூடிய கோப்புக்கள் அல்லது கோப்புறைகள் உங்கள்  Android சாதனத்தில் சேமிக்கப்பட்டிருக்கும் இடத்தை அடைந்து கொள்ள உங்கள் Android சாதனத்தில் மூன்றாம் நபர் File Manage செயலி ஒன்று இருத்தல் வேண்டும். இதற்கு ES File Explorer செயலி சிறந்ததாகும்.

Search Everything எனும் Android சாதனத்துக்கான இலவச செயலியை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top