ஒரு சந்தர்பத்தில் இணையம் என்பது எட்டாக்கனியாக இருந்திருந்தாலும் இன்று வீட்டுக்கு வீடு இணையம் எனும் சாத்தியத்தை இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கி உள்ளது.

Firewall App Blocker tamil review


அந்த வகையில் இன்று இணையம் என்பது சர்வ சாதாரணமாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சில நாடுகளில் அல்லது சில பிரதேசங்களில் அதற்காக செலுத்தப்படும் கட்டணம் அதிகமாகவே உள்ளது.


சில சந்தர்பங்களில் நாம் எமது கணினி மூலம் இணையத்தினை சொற்ப அளவே பயன்படுத்தி இருப்போம் ஆனால் பட்டியலிலோ அதிக தரவுப்பாவனை இடம் பெற்றிருப்பதாக காட்டப்பட்டிருக்கும் அல்லது இணையத்தை பயன்படுத்துவதற்காக நமக்கு தரப்பட்டுள்ள மொத்த தரவுகளின் எல்லை மிக விரைவில் தீர்ந்துவிடும் 


இதற்கு முக்கிய காரணம் நாம் நாம் இணையத்துடன் எமது கணினியை தொடர்பு படுத்திவிட்ட பின் கணனியில் நிறுவப்பட்டுள்ள ஏராளமான மென்பொருள்கள் தானாகவே இணையத்துடன் தொடர்பு படுகின்றன. சில மென்பொருள்கள் இவ்வாறு இணையத்துடன் இணைந்த பின் அவைகள் தானாகாவே அதன் புதிய பதுப்புக்கு மேம்படுத்திக் கொள்கின்றன. 

எனவே இது போன்ற மென்பொருள்களை கண்டறிந்து அவைகள் இணையத்தோடு இணைவதை தடுப்பதன் மூலம் எமது அதிக தரவுப்பாவனையை கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் இதனையும் பார்க்க: இணையத்துடன் தொடர்புபட்டிருக்கும் மென்பொருள்களை கண்காணிக்க உதவும் இலவச மென்பொருள்.


உங்களை அறியாமல் இணையத்தோடு தொடர்புபடும் மென்பொருள்களை இணையத்தோடு தொடர்பு பட முடியாதபடி அமைத்துக்கொள்ள உதவுகின்றது Firewall App Blocker எனும் இலவச மென்பொருள்.

இலவச மென்பொருள்


  • இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள Add Application என்பதன் மூலம் குறிப்பிட்ட மென்பொருள்களை தெரிவு செய்து இதில் இணைப்பதன் மூலமோ அல்லது குறிப்பிட்ட மென்பொருளின் Shortcut icon ஐ இதி Drag and Drop செய்வதன் மூலமோ அவ்வாறன மென்பொருள்களை இதில் இணைத்துக்கொள்ளலாம். பின் அவைகளை இணையத்துடன் தொடர்புபட முடியாதவாறு இந்த மென்பொருள் தடுத்து நிறுத்தும்.
  • மேலும் இந்த மென்பொருளில் உங்கள் இணைய உலாவிகளை இணைத்து விடுவதன் மூலம் உங்களை தவிர ஏனையவர்களால் இணையத்தை பயன்படுத்த முடியாதவாறு அமைத்துக்கொள்ளவும் முடியும்.
  • அத்துடன் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ள Option ====> Add to exe Context Menu என்பதனை சுடுவதன் மூலம் உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை Right Click செய்வதன் மூலம் மிக இலகுவாக இந்த மென்பொருளில் இணைத்துக்கொள்ளலாம்.
Add to exe Context Menu in firewall app blocker

  • இவைகள் தவிர இணையத்துடன் தொடர்பு பட முடியாதவாறு நீங்கள் இந்த மென்பொருளில் இணைத்திருக்கும் மென்பொருள்களின் பட்டியலை கணினியின் ஒரு இடத்தில் சேமித்து வைத்துக்கொள்ளவும் (Export) பிறகொரு சந்தர்பத்தில் அவற்றினை பயன்படுத்திக்கொள்ளவும் முடிகிறது (Import)கணினியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது கணினியை பயன்படுத்தும் அனைவருக்கும் பயனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top