எமது Android சாதனத்தில் நாம் ஏராளமான செயலிகளை நிறுவி பயன்படுத்துகிறோம் அல்லவா?

எனவே அவற்றின் மூலம் உருவாக்கப்படும் தேவையற்ற கோப்புக்களால் எமது Android சாதனத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படும் சந்தர்பங்களும் உண்டு. அதுமட்டுமல்லாமல் எமது Smart சாதனத்தின் வேகத்தை பெருமளவு குறைப்பதுடன் அடிக்கடி அது நிலை குழைந்து போவதற்கும் காரணமாக அமைந்து விடுகின்றது.

the cleaner tamil


எனவே இது போன்று தேங்கும் தேவையற்ற கோப்புக்களை கண்டறிந்து நீக்கிக்கொள்ள ஏராளமான செயலிகள் உதவுகின்றன என்றாலும் அவற்றுள் விரல் விட்டு எண்ணக்கூடிய சில செயலிகள் மூலமே சிறந்த பயனை பெற முடிகின்றது.


அந்த வகையில் எமது Android  சாதனத்தினையும் கணினியையும் வேகமாக இயங்கச் செய்ய உதவும் Clean Master எனும் மென்பொருளை எமது முன்னைய பதிவின் மூலம் பார்த்திருந்தோம். அதே போல் Mobile Care எனும் மென்பொருளையும் எமது முன்னைய பதிவுகள் மூலம் பார்த்திருந்தோம் இதுவும் எமது Android சாதனத்தின் வேகமான செயற்பாட்டுக்கு துணை புரியக்கூடியதாகும்.

அதே போல் The Cleaner எனும் செயலியும் எமது Android சாதனத்தின் வேகமான செயற்பாட்டுக்கு உதவுகின்றது.

android speed in tamil

  • எமது Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள வெவ்வேறு செயலிகளாலும் சேமிக்கப்படும் தேவையற்ற கோப்புக்களை மிக வேகமாக கண்டறிந்து நீக்கக்கூடிய இந்த செயலியானது எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ளது.
  • மேலும் குறிப்பிட்ட சாதனத்தின் பின் புலத்தில் தொடர்ச்சியாக இயங்கும் சில மென்பொருள்கள் காரணமாக அவைகள் எமது Android சாதனத்தின் Ram நினைவகத்தை அதிகம் பயன்படுத்திக் கொள்வதுடன் அவைகள் குறிப்பிட்ட சாதனத்தின் Battery இன் பெரும் பகுதியையும் எடுத்துக்கொள்கின்றது எனவே இந்த குறைபாட்டையும் The Cleaner எனும் இந்த செயலி மிக வேகமாக கண்டறிந்து நிவர்த்தி செய்துகொள்ள உதவுகின்றது.
  • அத்துடன் உங்கள் Android சாதனத்தில் நீங்கள் பயன்படுத்தாத மற்றும் தேவையற்ற செயலிகளை இந்த செயலி மூலம் ஒரே நேரத்தில் தெரிவு செய்து நீக்கிக்கொள்ள முடியும்.
  • மேலும் SCHEDULED MAINTENANCE எனும் வசதி மூலம் குறிப்பிட்ட சாதனத்தை தானாகவே சோதித்து குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் இந்த செயலி உதவுகின்றது.
  • இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை  தரும் இந்த செயலியை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள சாளரத்தின் மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top