சில மென்பொருள்களை நாம் பயன்படுத்துவதற்காக திறக்கும் போது அது எமது கணனியின் RAM, CPU போன்றவற்றின் பயன்பாட்டினை எடுத்துக்கொள்வதால் அந்த மென்பொருள் திறப்பதற்கே சில நிமிடங்களை எடுத்துக்கொள்ளும்.

அத்துடன் எமது கணனியில் அதிகமாக RAM, CPU போன்றவைகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றினை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாதவாறு அடிக்கடி கணனி உறையும் (Stuck) சந்தர்பங்களும் ஏற்படுவதுண்டு.

Game Assistant 2 free software


இது போன்ற அனுபவங்கள் நாம் கணனி விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஏற்படுகின்றன.


எனவே இவ்வாறான சந்தர்பங்களில் எமக்கு உதவுகின்றது Iobit தரும் Game Assistant 2 எனும் இலவச மென்பொருள். எமது முன்னைய பதிவுகள் மூலம் எமது கணணியை வேகமாக இயங்கச்செய்ய Iobit தரும் Advanced System Care மென்பொருள் பற்றி பார்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மென்பொருளின் பிரதான சாளரத்தில் தரப்பட்டுள்ள Add Games என்பதனை சுட்டுவதன் மூலம் இதில் நீங்கள் விரும்பும் கணனி விளையாட்டுக்களையோ அல்லது மென்பொருள்களையோ இணைத்துக் கொள்ளலாம். அல்லது அவற்றுக்கான Shortcut icon ஐ இதில் Drag and Drop செய்வதன் மூலமும் இணைத்துக்கொள்ளலாம்.


  • மேற்குறிப்பிட்ட வகையில்  Game Assistant 2 மென்பொருளில் இணைக்கப்பட்ட அந்த மென்பொருளை அல்லது கணனி விளையாட்டை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட விளையாட்டையோ அல்லது மென்பொருளையோ தங்கு தடையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மேலும் இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணனியின் RAM எந்த எளவு பயன்படுத்தப்படுகின்றது என்பதனை அறிந்துகொள்ள முடிவதுடன் அதற்கான Icon ஐ சுட்டுவதன் மூலம் தேவையற்ற விதத்தில் RAM ஐ பயன்படுத்தும் கோப்புக்களை அதிலிருந்து நீக்கிக்கொள்ளவும் முடியும்.
  • அத்துடன் உங்கள் கணனியில் இருக்கக்கூடிய CPU மற்றும் Motherboard அது எந்த அளவு வெப்பமடைந்துள்ளது என்பதனையும் இந்த மென்பொருள் மூலம் அறிந்துகொள்ள முடிவதுடன் அதன் வெப்பம் அதிகமாகும் சந்தர்பத்தில் ஒரு அலாரத்தை ஏற்படுத்தி அதனை உங்களுக்கு அறிந்துகொள்ளவும் வழிவகுக்கின்றது.
  • இந்த மென்பொருளில் உங்கள் கணனியின் திரையை Screenshot எடுக்கும் வசதி மேலதிக வசதியாக தரப்பட்டுள்ளது.


Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top