உங்கள் Android சாதனத்துக்கு அழைப்புக்கள், மற்றும் குருஞ்செய்திகள் வரும் போது அதன் Flash Light ஐ விட்டு விட்டு ஒளிரச்செய்கிறது Flash Alert Pro எனும் மென்பொருள்.


Flash Alert Pro tamil


அது மட்டுமல்லாது உங்கள் Android சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள   மென்பொருள்கள் மூலம் Notification கள் ஏற்படுத்தப்படும் போதும் அதனை அறிந்து கொள்வதற்காக Flash Light விட்டு விட்டு ஒளிரச்செய்ய முடியும்.


மேலும்  குறிப்பிட்ட சில மென்பொருள்களால் ஏற்படுத்தப்படும் Notification களுக்கு Flash Light ஒளிர்வதை நீங்கள் விரும்பாவிட்டால் அதனை தவிர்த்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது.

Flash Light விட்டு விட்டு ஒளிரும் கால இடைவெளியையும் எம்மால் தீர்மானித்துக் கொள்ள முடிவதுடன் இதில் தரப்பட்டுள்ள Do Not Disturb எனும் வசதி மூலம் இந்த மென்பொருள் எந்த நேரத்தில் இயங்க வேண்டும் என்பதற்கான கால இடைவெளியை எம்மால் அமைத்துக்கொள்ளவும் முடியும்.

இவைகள் தவிர இன்னும் பல வசதிகளை தரும் இந்த மென்பொருளானது ஆரம்பத்தில் $2.99 எனும் கட்டணத்தை செலுத்தியே பெறவேண்டி இருந்தாலும் தற்பொழுது இதனை இலவசமாகவே தரவிறக்கிக்கொள்ள முடியும்.


கீழுள்ள சாளரத்தின் மூலம் இதனை உங்கள் Android சாதனத்துக்கும் தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top