HI






Ashampoo Photo Commander 11 எனும் மென்பொருளானது நீங்கள் விரும்பிய விதத்தில் உங்கள் புகைப்படங்களில் மாற்றத்தினை ஏற்படுத்திக்கொள்ள உதவுகின்றது.

Ashampoo Photo Commander 11 tamilinfotech


ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை ஒரே நேரத்தில் நிருவகிக்க உதவும் இந்த மென்பொருளானது உங்கள் கணனியில் இருக்கும் புகைப்படங்களை மிக இலகுவாக திறந்து பார்பதற்கும் குறிப்பிட்ட ஒரு புகைப்படம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது.


மேலும் இந்த மென்பொருளின் ஊடாக உங்கள் புகைப்படங்களினை Cut, Crop, Resize செய்து கொள்ள முடிவதுடன் ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை ஒரே நேரத்தில் ஒரு வடிவத்தில் இருந்து இன்னுமொரு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.

அத்துடன் உங்கள் கணனியில் ஒரு கோப்புறையில் இருக்கக்கூடிய புகைப்படங்களை Slideshows முறையில் பார்பதற்கும் உருவாக்கிக் கொள்வதற்கும் முடியும்.


அதேபோல்  உங்கள் புகைப்படங்களை Album, Calendar, Collage, Panorama, Contact sheet ஆக உருவாக்கி அவற்றினை இந்த மென்பொருளின் மூலமாகவே CD/DVD போன்ற இருவட்டுக்களுக்கு பதிந்துகொள்ள முடியும்.

இவைகள் தவிர Quick Fix எனும் வசதி மூலம் Quick Fix என்பதனை ஒரு தடவை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி அதனை ஒரு தெளிவான புகைப்படமாக மாற்றிக்கொள்ள முடியும். 

மேலும் அவற்றில் உள்ள தேவையற்ற அம்சங்களை நீக்கிகொள்ளவும் அவற்றுக்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும், அழகிய Frame களைக்கொண்டு அலங்கரிக்கவும் என பல ஏராளமான வசதிகளை இந்த மென்பொருள் தருகின்றது.


இந்த மென்பொருளானது 50 அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தி பெறவேண்டியதாகும். இருப்பினும் கீழுள்ள இணைப்பில் சென்று உங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் மூலம் இந்த மென்பொருளுக்கான Licence Key ஐ இலவசமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.


இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை சுட்டுக.


இந்த சலுகை எந்த ஒருநேரத்திலும் முடிவடையலாம்.

உங்கள் புகைப்படங்களை மெருகேற்றிக்கொள்ள PhotoScape எனும் இலவச மென்பொருளும் உதவுகின்றது.



Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top