நாம் எமது கணினியை இணையத்துடன் தொடர்புபடுத்திய பின் எமது கணினியில் நிறுவப்படும் எத்தனையோ மென்பொருள்கள் இணையத்துடன் தொடர்பு படுகின்றன ஆனால் நாம் அவற்றினை அறிவதில்லை சில சந்தர்பங்களில் எமது கணினியை பாதித்துள்ள வைரஸ் நிரல்களும் இணையத்துடன் தொடர்புபட்டு எமது தனிப்பட்ட தகவல்களை இணையத்துக்கு தரவேற்றக்கூடிய நிகழ்வுகளும் ஏற்படுவதுண்டு.


எனவே நாம் எமது கணினியை இணையத்துடன் தொடர்பு படுத்திய பின் எந்தெந்த மென்பொருள்கள் இணையத்துடன் தொடர்புபடுகின்றது என்பதனையும் அவைகள் எந்த அளவு தரவுகளை பயன்படுத்துகின்றது என்பதனையும் மிகவும் தெளிவாக அறிந்து கொள்ள உதவுகின்றது GlassWire எனும் இலவச மென்பொருள்.
GlassWire எனும் இந்த மென்பொருளானது எமது கணினியில் தொடர்பு படுத்தப்பட்டிருக்கும் இணையத்தின் ஊடாக ஒரு மென்பொருள் இணையத்தோடு தொடர்பு படும் போது அது எந்த மென்பொருள் என்பதனை Notification மூலம் எமக்கு அறியத்தருவதுடன் அவைகள் தொடர்பான முழு விவரத்தையும் சேமித்து வைத்து பிறகொரு சந்தர்பத்தில் அதனை பார்த்துக்கொள்ளவும் வழிவகுக்கின்றது.மேலும் குறிப்பிட்ட ஒரு தினத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு வாரத்தில் அல்லது குறிப்பிட்ட ஒரு மாதத்தில் இணையத்தின் ஊடாக எந்த அளவு தரவுகளை மொத்தமாக பயன்படுத்தியுள்ளீர்கள் அவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ள தரவுகளில் எந்த அளவு தரவுகளை தரவேற்றி உள்ளீர்கள், எந்த அளவு தரவுகளை தரவிறக்கி உள்ளீர்கள் என்பதனையும் அந்த தரவுகள் எந்தெந்த மென்பொருள்கள் மூலம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதனையும் இந்த மென்பொருள் மூலம் மிக இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.
இவைகள் தவிர நிகழ்நேரத்தில் இணையத்தின் ஊடாக இடம்பெறும் தரவுப்பரிமாற்றத்தினை இந்த மென்பொருள் தரும் எளிமையான இடைமுகத்தின் ஊடாக ஒரே பார்வையில் பார்த்துக்கொள்ளவும் முடியும்.
சிறியோர் முதல் பெரியோர் வரை எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இலவச மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.மேலும் உங்கள் கணினியின் வன்தட்டில் ஒவ்வொரு செக்கனும் இடம்பெறக்கூடிய மாற்றத்தினை அறிந்துகொள்ள Moo0 File Monitor  எனும் இலவச மென்பொருள் உதவுகின்றது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top