இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் "கடவுச்சொல்" என்பது மிகவும் முக்கியமானதல்லவா?


நமது கணனி, மற்றும் Smart சாதனங்களில் உள்ள எமது தனிப்பட்ட தகவல்களை ஏனையவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்கு, வெவ்வேறுபட்ட இணையதளங்களில் எமக்கென கணக்கொன்றினை உருவாக்கிக் கொள்வாதற்கு, இணையத்தின் மூலம் வங்கி நடவடிக்கைகளை அல்லது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு என பல்வேறு சந்தர்பங்களிலும் நாம் கடவுச்சொற்களை பயன்படுத்த வேண்டியுள்ளது.

வலிமையான கடவுச்சொல்


அவ்வாறு நாம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் ஏனையவர்களால் இலகுவாக ஊகித்துக் கொள்ள முடியுமானதொன்றாக இருந்தால் நமது நிலைமை பரிதாபத்துக்கு உள்ளானதாகிவிடும்.


எனவே நாம் உருவாக்கக்கூடிய கடவுச்சொற்கள் வலிமையானதாகவும், எம்மால் இலகுவில் ஊகிக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

அந்த வகையில் எமது கடவுச்சொல்லானது வலிமையாக அமைய ஆங்கில பெரிய எழுத்துக்கள், ஆங்கில சிறிய எழுத்துக்கள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டு ஆகக் குறைந்தது 8 எழுத்துக்களையாவது கொண்டமைதல் வேண்டும்.எனவே இவ்வாறு உருவாக்கப்படும் கடவுச்சொற்கள் நிச்சயம் வலிமையானதாகவே அமையும். 

விடயம் என்னவெனில் அவ்வாறு நீங்கள் உருவாக்கும் கடவுச்சொல் வலிமையானதுதானா? அப்படியாயின் அது எந்த அளவு வலிமையானது என்பதனை அறிந்து கொள்ள உதவுகின்றது Passwordmeter எனும் இணைய தளம்.


உங்களுக்கு என வலிமையானதொரு கடவுச்சொல்லை உருவாக்கிகொல்லவோ அல்லது உங்கள் கடவுச்சொல் வலிமையானதுதானா? என்பதனை அறிந்து கொள்ளவோ உதவும் இந்த தளத்தில் நீங்கள் உங்கள் கடவுச்சொல்லினை உருவாக்க உள்ளிடும் ஒவ்வொரு எழுத்தும் உங்கள் கடவுச்சொல்லுக்கு எந்த அளவு வலிமையை சேர்கின்றது என்பதை புள்ளிவிபர அடிப்படையில் அறிந்துகொள்ள முடியும்.

Check your password


இந்த தளத்திற்குச்செல்ல கீழுள்ள இணைப்பை சுட்டுக.மேலும் இதனையும் பார்க்க: வலிமையானதொரு கடவுச்சொல்லை உங்களுக்கு பரிந்துரைக்கும் Google Chrome இணைய உலாவி (மறைந்திருக்கும் வசதி)

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top