ES File Explorer எனும் மென்பொருளானது Android சாதனங்களில் இருக்கும் கோப்புக்களை நிருவகிக்க உதவும் சிறந்த ஒரு மென்பொருளாகும்.


ES File Explorer for android

உங்கள் Android சாதனத்தில் இருக்கும் ஆவணங்கள், புகைப்படங்கள், இசை மற்றும் வீடியோ கோப்புக்கள் என வெவ்வேறாக பட்டியல் படுத்தித்தரும் இந்த மென்பொருளானது ZIP, RAR போன்ற வடிவங்களில் அமைந்துள்ள கோப்புக்களை Extract செய்துகொள்ளவும் உதவுகின்றது.



ES File Explorer in tamil

  • மேலும் உங்கள் Android சாதனத்தில் உள்ள எந்த ஒரு கோப்பினையும் Select, Cut/Copy/Paste, Move, Create, Delete, Rename, Search, Share, Send, Hide, Create Shortcut, மற்றும் Bookmark போன்ற செயற்பாடுகளை குறிப்பிட்ட Android சாதனம் மூலமாகவோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்ட கணனி மூலமாகவோ மேற்கொள்ளவும் முடிகிறது.
  • அத்துடன் ஆவணங்கள், புகைப்படங்கள், இசை மற்றும் வீடியோ கோப்புக்களை திறந்து பார்பதற்கும் பயன்படுத்துவதற்குமான வசதிகளையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது. (Media Player, Text Editor, Downloader,Image Viewer, Etc.......)
  • இவைகள் தவிர Android சாதனத்தில் நிறுவப்பட்டிருக்கும் மென்பொருள்களை (APK Manager) இதில் தரப்பட்டிருக்கும் வசதியின் மூலம் குறிப்பிட்ட ஒரு மென்பொருள் தொடர்பான விபரங்களை அறிந்திட முடிவதுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட மென்பொருள்களை ஒரே நேரத்தில் நீக்கிக்கொள்ளவும் (Uninstall) முடிகின்றது.
  • மேலும் இதில் தரப்பட்டுள்ள Cloud வசதி மூலம் Dropbox, Box.net, Sugarsync, Google Drive, SkyDrive, Amazon S3, Yandex போன்ற இன்னும் பல இணைய சேமிப்பகங்களில் இருக்கக்கூடிய உங்கள் கோப்புக்களையும் இந்த மென்பொருளின் ஊடாக நிருவகிக்க முடிகிறது.

இது போன்ற இன்னும் பல ஏராளமான வசதிகளையும் இந்த மென்பொருள் தருகின்றது. (பதிவின் நீளம் கருதி ஏனையவைகளை இங்கு குறிப்பிடவில்லை)



300 மில்லியனுக்கும் அதிகமான Android சாதனங்களில் நிறுவி பயன்படுத்தப்படும் இந்த மென்பொருளானது தமிழ் மொழிக்கும் ஆதரவு அளிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கீழுள்ள சாளரத்தின் மூலம் இதனை நீங்களும் தரவிறக்கி உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.



இதற்கு முன் இது போன்ற ஆனால் சற்று வேறுபட்ட வசதிகளை தரும் Tomi File Manager மென்பொருளையும் நாம் அறிமுகப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top