நாம் எமது கணனியில் ஏராளமான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்துவோம் அல்லவா? அவ்வாறு நாம் ஒரு மென்பொருளை நிறுவும் போது அதனுடன் இணைந்தாற் போல் இன்னுமொரு மென்பொருளும் சேர்ந்து எமது கணனியில் நிறுவப்படுவதும் உண்டு.


Unchecky protect your pc from 3rd party software


நாம் எமது கணனியில் பெரும்பாலான மென்பொருள்களை நிறுவும் போது தோன்றும் சாளரத்தில் இன்னுமொரு மென்பொருளும் நிறுவப்படுவதற்கான அறிவுறுத்தல் தரப்பட்டிருக்கும் அதனை நாம் சரியாக கவனித்தால் தேவையற்ற இன்னுமொரு மென்பொருள் எமது கணனியில் நிறுவப்படுவதை தவிர்த்திடலாம்.


ஆனாலும் எமது கவனம் இன்மையின் காரணமாகவோ அல்லது மறதியின் காரணமாகவோ, அல்லது அறியாமலோ நாம் அதனை நிறுவி விடுவோம். இதனால் எமது வன்தட்டில் இடப்பற்றாக்குறை ஏற்படுவதுடன் கணனியின் வேகமும் பாதிக்கப்படக்கூடும்.

சில சந்தர்பங்களில் Adware எனும் மென்பொருள்கள் நிருவப்படுவதால் நாம் இணையத்தினை பயன்படுத்தும் போது தேவையற்ற விளம்பரங்கள் எமது இணைய உலவியில் தோன்றி கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தும் சந்தர்பங்களும் இருப்பதுண்டு.

எனவே இது போன்ற சிரமங்களை தவிர்த்துக்கொள்ள உதவுகின்றது Unchecky எனும் இலவச மென்பொருள். 

இதனை கணனியில் நிறுவிக்கொள்வதன் மூலம் நாம் குறிப்பிட்ட ஒரு மென்பொருளை எமது கணனியில் நிறுவும் போது தேவையற்ற இன்னுமொரு மென்பொருள் எமது கணனியில் நிறுவப்படுவதை இது தானாகவே கண்டறிந்து அதனை தவிர்த்து விடும்.


இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவிவிட்டால் மாத்திரம் போதுமானது பின் மென்பொருள்கள் நிறுவப்படும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் இது அதனை கண்காணித்து மேலதிக மென்பொருள்கள் நிறுவப்படுமானால் அதனை தானாகவே தவிர்த்திடும். 

இதனை தரவிறக்கிக்கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


Download Unchecky


Love to hear what you think!

2 comments:

 
Top