நாம் புதியதொரு கணணியை வாங்கும் போதோ அல்லது எமது கணனிக்கான புதிய வன்பொருள் ஒன்றினை கொள்வனவு செய்ய வேண்டிய சந்தர்பத்திலோ அல்லது வேறு தேவைகளுக்கோ எமது கணனி தொடர்பான தகவல்களை பெற வேண்டி இருப்பின் எமக்கு உதவுகின்றது Speccy எனும் இலவச மென்பொருள்.


Speccy main interface

இந்த மென்பொருளை தரவிறக்கி எமது கணனியில் நிறுவுவதன் மூலம் எமது கணனியில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வன்பொருள் தொடர்பிலும் ஆழமான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.கணனியில் இருக்கக்கூடிய இயங்குதளம், CPU, RAM, Motherboard, Graphics, Storage, Optical Drivers, Audio, Peripherals, Network போன்றவைகள் தொடர்பான ஆழமான தகவல்களை இந்த மென்பொருள் பட்டியல் படுத்துவதுடன் அந்த தகவல்களை Text Document மற்றும் HTML வடிவில் கணனியில் சேமித்துக்கொள்ளவும் Print செய்து கொள்ளவும் முடிகிறது.


கணனியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ள இந்த மென்பொருளை இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக்கொள்ள முடியும்.


கணனியில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதற்கு அதிகமானோர் பயன்படுத்தும் இலவச மென்பொருளான Ccleaner ஐ வடிவமைத்து வழங்கும் அதே Priform குழுமமே இந்த மென்பொருளையும் வடிவமைத்து இலவச பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளது.


நீங்களும் இதனை தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பை சுட்டுக.


மென்பொருள்களின் உதவியின்றி உங்கள் கணனி தொடர்பான தகவல்களை எவ்வாறு அறிந்து கொள்ளலாம் எனும் பதிவை நாம் ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தோம்.

அதனை கீழே இணைக்கப்பட்டுள்ள சாளரத்தின் மூலம் வசித்து அறிந்து கொள்ளலாம்.Love to hear what you think!

2 comments:

 1. சூப்பர்................ கணினி மற்றும் அனைத்து தொழினுட்ப செய்திகள் தரும் Tamilinfotech வலைதளத்திற்கு நன்றிகள்...........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு நன்றி.........
   புதுமைகள் படைக்கவுள்ளோம்
   தொடர்ந்தும் இணைந்திருங்கள். :)

   நீக்கு

 
Top