பல பக்கங்களை கொண்டுள்ள ஒரு PDF ஆவணத்தை ஒவ்வொரு தனித்தனி பக்கங்களாக வேறு படுத்திக்கொள்ளவும் தனித்தனி பக்கங்களாக  உள்ள PDF கோப்புக்களை ஒரு நீண்ட ஆவணமாக இணைத்துக்கொள்ளவும் உதவுகின்றது Icecream PDF Split and Merge எனும் முற்றிலும் இலவசமான மென்பொருள்.


Icecream PDF Split and Merge tamil review

இந்த மென்பொருள் மூலம் நீண்ட ஒரு PDF ஆவணத்தை உங்கள் தேவைக்கு ஏற்ற விதத்தில் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.


  • ஒவ்வொரு தனித்தனி பக்கங்களாக வேறு படுத்திக் கொள்ள முடியும்.
  • இவ்விரண்டு பக்கங்கள், அல்லது மும்மூன்று பக்கங்கள் என வெவ்வேறாக வேறு பிரித்துக்கொள்ள முடியும்.
  • ஒரு PDF ஆவணத்தில் உள்ள குறிப்பிட்ட ஒரு சில பக்கங்களை மாத்திரம் நீக்கிக் கொள்ள முடியும்.
  • ஒரு PDF ஆவணத்தின் குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் இருந்து குறிப்பிட்ட இன்னுமொரு பக்கம் வரை வேறு பிரித்துக்கொள்ள முடியும்.

PDF Split and Merge by icecream


இது தவிர வெவ்வேறாக இருக்கக்கூடிய பல PDF கோப்புக்களை மிக இலகுவாக ஒழுங்கமைத்து ஒரு நீண்ட PDF ஆவணத்தை தயாரித்துக் கொள்ளவும் முடிகிறது.
கணனியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்தும் வகையில் எளிமையான இடைமுகத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கிக் கொள்ள விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.மேலும் இதனையும் பார்க்க: PDF ஆவணங்களில் நீங்கள் விரும்பும் மாற்றத்தினை ஏற்படுத்த உதவும் இலவச மென்பொருள்

Love to hear what you think!

0 comments:

கருத்துரையிடுக

 
Top